இரு பிரைகேட் கப்பல் தயாரிக்க கோவா கப்பல் கட்டும் தளத்துடன் ஒப்பந்தம்
இரு ஏவுகணை பிரிகேட் கப்பல்கள் கட்டுமானம் செய்ய மத்திய அரசு கோவா கப்பல் கட்டும் தளத்துடன்( Goa Shipyard) ஒப்பந்தம் செய்துள்ளது.
கப்பல் படைக்காக இரு அதிநவீன ஏவுகணை பிரிகேட் ( advanced missile frigates) கட்ட கோவா தளத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யூனியன் அமைச்சர் Shripad Naik கூறியுள்ளார்.
கோவா தளத்திற்கு கிடைத்த மிகப் பெரிய ஆர்டராக இந்த ஒப்பந்தம் உள்ளது.இந்த புதிய கப்பல்கள் கட்டும் பணி தளத்திற்கு புதிய சவாலாக இருக்கும்.மேலும் எதிர்காலத்தில் அதிநவீன தொழில்நுட்ப கப்பல்கள் கட்ட இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கடலோர காவல் படைக்காக கோவா தளம் கட்டிய offshore patrol vessel கப்பல் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார்.இவ்விழாவில்
Coast Guard’s Director General Krishnaswamy Natrajan மற்றும் Department of Defence Production Secretary Subhash Chandra ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கோவா கப்பல் கட்டும் தளம் நேரத்திற்குள் இந்த கப்பல்களை தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு போர்க்கப்பல் ஏற்றுமதி குறித்து கோவா தளம் கலந்து உரையாடி வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் சில நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பேசினார்.