ஐக்கிய அரபு எமிரேக விமானப்படைக்கு அஸ்திரா ஏவுகணை ஏற்றுமதி ?

ஐக்கிய அரபு எமிரேக விமானப்படைக்கு அஸ்திரா ஏவுகணை ஏற்றுமதி ?

UAEAF விமானப்படை தனது  Mirage 2000-9 விமானங்களுக்காக அஸ்திரா ஏவுகணை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக United Arab Emirates (UAE) இந்திய அரசை நாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் Next-generation  Beyond Visual range Air-to-Air missile தான் அஸ்திரா ஆகும்.

யுஏஇ-ன் 66  Dassault Mirage 2000-9 விமானங்களில் இணைத்து உபயோகிக்க இந்த அஸ்திரா ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

UAE விமானப்படையில் 80 F-16E/F Block 60 Desert Falcon மற்றும் 66 Dassault Mirage 2000-9 விமானங்கள் உள்ளன.இந்த மிராஜ் விமானங்களுக்காக தான் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளது.

அஸ்திரா இந்தியாவால் பலமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந்தியாவின் சுகாய் விமானங்களில் அஸ்திரா ஏவுகணைகள் இணைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.