பாக் அணுஏவுகணை சோதனை-650கிமீ இலக்குகளை தாக்க வல்லது

பாக் அணுஏவுகணை சோதனை-650கிமீ இலக்குகளை தாக்க வல்லது

தரையில் ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கும் அணு ஏவுகணையான சஹீன்-1 ( ‘Shaheen-I’) பலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது.

திங்கள் அன்று நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.650கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது இந்த ஏவுகணை.

இந்த ஏவுகணை இலக்கிற்குள் இந்தியாவின் பல முக்கிய நகரகங்கள் வருவது குறிப்பிடத்தக்கது. Article 370 நீக்கத்திற்கு பிறகு இந்தியா-பாக் உறவு மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனை குறித்து தகவல் வெளியிட்ட பாக் இராணுவ செய்தி பிரிவு பாக் இராணுவத்தின் Strategic Forces Command- ன் தயார் நிலையை இந்த சோதனை நிரூபிக்கும் எனவும் பயிற்சி மற்றும் எதற்கும் தயார் நிலையை அறிவுறுத்த இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.650கிமீ இலக்களை வெவ்வேறு விதமான வெடிபொருள்களை ஏந்தி தாக்க வல்லது இந்த ஏவுகணை என செய்திப் பிரிவு கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்டில் பாகிஸ்தான் அணுசக்தி கொண்ட தரை-தரை இலக்குகளை தாக்க வல்ல கஸ்நாவி பலிஸ்டிக் ஏவுகணையை ஏவி பரிசோதித்தது.இந்த ஏவுகணை 290கிமீ வரை செல்லக்கூடியது.

அதே போலவே இந்தியாவும் அக்டோபரில் பிரம்மோஸ் ஏவுகணையை ஏவி சோதனை செய்தது.

Leave a Reply

Your email address will not be published.