கே-4 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணை-இந்த வாரம் சோதனை
இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள 3500கிமீ வரை செல்லக்கூடிய கே-4 ஏவுகணை வங்காள விரிகுடா கடற்பகுதியில் இந்த வார இறுதியில் சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது பக்கத்தில் இதற்கு முன்னதாகவே இந்தியா தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ள உள்ளதை பதிவு செய்திருந்தோம்.அதன் படி தொடர்ச்சியாக பிரித்வி,அக்னி போன்ற ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று உலகின் வேகமான சூப்பர்சோனிக் ரக க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடலடியில் இருக்கும் ஒரு
fixed underwater pontoon-ல் இருந்து கே-4 ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்படும்.இந்தியாவினுடைய Defence Research and Development Organisation (DRDO) இந்த மேம்பாட்டு சோதனையை மேற்கொள்ள உள்ளது.
சோதனை சாதனையாக மாற நமது அறிவியலாளர்களுக்கு வாழ்த்துக்கள்
இந்திய இராணுவச் செய்திகள்