அக்னி-3 அணுஆயுத ஏவுகணை இரவு நேரச் சோதனை
இந்தியா முதல் முறையாக அக்னி-3 அணு ஏவுகணையை இரவு நேரச் சோதனையாக சோதனை செய்துள்ளது.
ஒடிசா கடற்பகுதியில் உள்ள கலாம் தீவின் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்திய அக்னி-3 3500கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க உள்ளது.
சில நாட்களாகவே இந்தியா தனது படையில் உள்ள ஏவுகணைகளை இரவில் சோதனை செய்து வருகிறது.
அக்னி-2, பிரித்வி ஆகிய ஏவுகணைகள் இரவு நேரச் சோதனையாக ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.