300 உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள் வாங்க தயார்: விமானப்படை
உள்நாட்டு தயாரிப்பு 300 விமானங்களை வாங்க தயாராக உள்ளதாக இந்திய அரசிடம் விமானப் படை கூறியுள்ளது.இந்தியாவின் Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் வாங்க தயாராக இருப்பதாக விமானப்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.சில பில்லியன் டாலர்கள் இதற்காக செலவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் டெலிவரி குறிப்பிட்ட நேரத்திற்குள் இருப்பது மிக மிக அவசியம் என அவர் கூறியுள்ளார்.இந்தியாவின் “Aeronautical Development Agency (ADA) மற்றும் HAL நிறுவனங்கள் இதற்கென இணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரி கூறியுள்ளார்.
அதாவது மேலும் 10 ஸ்குவாட்ரான்கள் Tejas Mark-II வாங்க (ஸ்குவாட்ரானுக்கு 16-18 விமானங்கள் வீதம்) தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் இந்தியாவின் Advance Medium Combat Aircraft (AMCA) விமானங்களும் வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
போர்விமானங்கள் தவிர விமானப்படை புதிதாக மேம்படுத்தியுள்ள HTTP-40 பயிற்சி விமானங்களும் வாங்க உள்ளது.புதிய விமானப் படை தளபதி Air Marshal RK Singh Bhadauria அவர்கள் உள்நாட்டு தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே விமானப்படை 40 initial version of Tejas வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.மேலும் 83
Tejas Mark-1A fighters வாங்கும் ஒப்பந்தம் மிக விரைவாக ஒப்பந்தமாக உள்ளது.
மேலும் அதிநவீன ஸ்டீல்த் மற்றும் அதிநவீன ரேடார் மற்றும் ஆயுதங்கள் கொண்டு தயாராக உள்ள AMCA விமான மேம்பாடு இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது. Tejas Mark-II வடிவமைப்பு மேம்பாடு கடைசி கட்ட நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விமானப்படைக்கு 42 ஸ்குவாட்ரான்கள் தேவையாக உள்ள நிலையில் தற்போது 30 ஸ்குவாட்ரான்கள் தான் உள்ளன.