கார்ட்டோசாட்-3 உளவு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உள்ள இஸ்ரோ

கார்ட்டோசாட்-3 உளவு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உள்ள இஸ்ரோ

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான Indian Space Research Organisation (Isro) மூன்று  earth observation அல்லது surveillance satellites விண்ணுக்கு அனுப்ப உள்ளது.ஒரு செயற்கைகோள் வரும் நவம்பர் 25 அன்றும் மற்ற இரு செயற்கைகோள்கள் டிசம்பர் மாதமும் அனுப்பப்பட உள்ளது.இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு  “eyes in the sky” என வருணிக்கப்படும் செயற்கை கோள்கள் அனுப்பப்பட உள்ளது.இந்த மூன்று முக்கிய செயற்கை கோள்கள் தவிர்த்து 12 வெளிநாட்டு nano மற்றும் micro satellites களையும் சுமந்து பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் பறக்க உள்ளன.

PSLV C-47 rocket ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 25 காலை 9.28 க்கு விண்ணில் பாயும்.இந்த ராக்கெட் மூன்றாம் தலைமுறை புவி கண்காணிப்பு கார்டோசாட்-3ஐ தனது முதன்மை செயற்கை கோளாக கொண்டு பறக்கும்( third-generation earth-imaging satellite Cartosat-3).

தவிர அமெரிக்காவினுடைய 13 கமெர்சியல் நானோ செயற்கை கோள்களையும் ஏந்தி பறக்கும்
( commercial nanosatellites ).

கார்ட்டோசாட் 3 சுமார் 509கிமீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.

இதன் பிறகு மேலும் இரு surveillance satellite-களை இஸ்ரோ ஏவும். Risat-2BR1 மற்றும் Risat-2BR2 என்ற இந்த இரு செயற்கை கோள்களும்  PSLVC48 மற்றும் C49 ராக்கெட்டுகள் உதவியுடன் அடுத்த மாதம் அனுப்பப்படும்.

இதற்கு முன் அனுப்பப்பட்ட
Cartosat-2 ஐ விட தற்போது அனுப்ப உள்ள  Cartosat-3 அதிநவீனமானது.

Risat-2BR1 மற்றும்  Risat-2BR2 ஆகிய இரு செயற்கை கோள்களும் இராணுவத்திற்கு பெரிதும உபயோகமாக இருக்கும்.மேகங்களின் வழியாக ஊடுருவி பார்க்கவும், இரவில் துல்லிய புகைப்படங்கள் எடுக்கவும் இவற்றால் முடியும்.எல்லைப்புற காவல் மற்றும் பயங்கரவாத தடுப்பிற்கு இவை உதவும்.

Leave a Reply

Your email address will not be published.