படையில் இருந்து வெளியேற்றப்பட உள்ள மிக்-27

படையில் இருந்து வெளியேற்றப்பட உள்ள மிக்-27

இந்திய விமானப்படையில் உள்ள அனைத்து மிக்-27 விமானங்கள் ஸ்குவாட்ரானும் இந்த வருட இறுதி டிசம்பரில் படையில் இருந்து ஓய்வு பெற உள்ளன.

அடுத்த மாத டிசம்பர் 27ல் தனது கடைசி பறப்பை பறக்க உள்ளன இந்த மிக்-27 விமானங்கள்.

1981களில் படையில் இணைந்த மிக்-27 விமானங்கள் தங்களது 38 வருட தேச சேவைக்கு பிறகு படையில் இருந்து வெளியேற்றப்படுகிறது.மூன்று வருடத்திற்கு முன்பே இரு மிக்-27 ஸ்குவாட்ரான்கள் ஹசிமாரா தளத்தில் நடைபெற்ற விழாவில் படையில் இருந்து ஓய்வு பெற்றன.தற்போது 29 ஸ்குவாட்ரான் மிக்-27 விமானங்கள் மட்டுமே மீதமுள்ளன.இந்த ஸ்குவாட்ரானும் தற்போது படையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது.

கடந்த வருடங்களாகவே மிக்-27 விமானங்கள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.