2020 குடியரசு தின சிறப்பு விருந்தினர் யார் ?
2020ம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் தலைவர் ஜெய்ர் போல்சோனாரோ (Jair Bolsonaro President of Brazil🇧🇷) பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வருட குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இந்திய அரசு சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு பிரேசில் அதிபர் கலந்து கொள்வதாக உறுதியளித்தார்.
11 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் பிரேசில் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதில் பயங்கரவாத எதிர்ப்பு விசயங்களில் இரு நாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து பேசப்பட்டன.
இந்நிலையில் இந்திய குடியரசு தின விழாவில் அழைப்பு விடுத்ததும் பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.