அக்னி-2 பலிஸ்டிக் ஏவுகணை இரவு நேரச் சோதனை

அக்னி-2 பலிஸ்டிக் ஏவுகணை இரவு நேரச் சோதனை

இந்தியா அக்னி-2 பலிஸ்டிக் ஏவுகணையை இரவு நேரத்தில் சோதனை செய்துள்ளது.ஒடிசா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நடுத்தூர ரக தரை-தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் அக்னி-2 ஏவுகணையை இரவு நேரத்தில் பயன்படுத்துவோர் சோதனையாக( users trial ) நடத்தியுள்ளது.ஒடிசாவின் கலாம் தீவில் ஏவுதளம் 4ல் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இரு நிலை surface-to-surface ஏவுகணையான இதை இரவு 7.32 மணிக்கு இந்தியாவின்  Strategic Force Command ஏவி பரிசோதித்தது. “training user-trial” அதாவது பயிற்சி சோதனை என இந்த சோதனை அழைக்கப்படுகிறது.அதாவது எந்தவித பாதுகாப்பு அறிவியலாளர்கள் இல்லாமேலே இராணுவம் தானாகவே இந்த ஏவுகணையை எதிரி மீது ஏவ முடியும் என்ற உறுதியை இந்த சோதனை அளித்துள்ளது.

அக்னி-2 ஏவுகணை கடந்த 2004ல் படையில் இணைக்கப்பட்டு இராணுவத்தின் 555th missile group-ல் உள்ளது.ஒரு டன் அளவுடைய அணு வெடிபொருளை ஏந்தி செல்ல வல்லது.20மீ நீளமுள் இந்த ஏவுகணையை டிஆர்டிஓவின் Advanced Systems  Laboratory தான் வடிவமைத்து தயாரித்தது.

2000கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லது இந்த ஏவுகணை.

Leave a Reply

Your email address will not be published.