இந்திய ஓமன் விமானப்படைகள் கூட்டுப்பயிற்சி-EX EASTERN BRIDGE-V

இந்திய ஓமன் விமானப்படைகள் கூட்டுப்பயிற்சி-EX EASTERN BRIDGE-V

இந்திய விமானப்படை மற்றும் ராயல் ஓமன் விமானப்படைகள் இணைந்து  EX EASTERN BRIDGE-V என்ற பெயரில் பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளன.

அக்டோபர்  17-26 வரை மாசிரா விமானப்படை தளத்தில் இந்த பயிற்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கடைசியாக 2017ல் இந்த பயிற்சி இந்தியாவின் ஜாம்நகர் தளத்தில்
 EX EASTERN BRIDGE-IV என்ற பெயரில் நடத்தப்பட்டது.

இந்த பயிற்சியின் போது மிக்-29 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.இந்தியாவிற்கு வெளியே மிக்-29 கலந்து கொள்ள உள்ள முதல் பயிற்சியாக இது இருக்கும்.

இந்திய விமானப்படை சார்பாக
  MiG-29 மற்றும் C-17 aircraft அனுப்பப்படும்.நமது MiG-29 விமானங்கள் ஓமன் விமானப்படையின்  Eurofighter Typhoon, F-16 மற்றும்  Hawk விமானங்களோடு கலந்து கொள்ள உள்ளது.

இரு நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சியை இதன் மூலம் பெறலாம்.மேலும் இரு நாடுகளும் தங்கள் உத்திகளை பகிர்ந்து கொள்ளும்.

இதன் மூலம் இரு நாடுகளின் உறவும் வலுப்பெறும்.மேலும் சர்வதேச வான் பகுதியில் நமது விமானிகள் செயல்படுவதற்கான பயிற்சியும் இதன் மூலம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published.