இந்தியா-மாலத்தீவு இராணுவங்கள் போர்பயிற்சி-Ekuverin2019

இந்தியா-மாலத்தீவு இராணுவங்கள் போர்பயிற்சி-Ekuverin2019

இந்திய இராணுவம் மற்றும் மாலத்தீவின் Maldives National Defence Force இணைந்து போர்பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.இரு நாடுகளும் இணைந்து போர்பயிற்சி மேற்கொள்வது இது பத்தாவது முறையாகும்.கடந்த காலங்களில் மாலத்தீவு மற்றும் இந்தியாவிற்கு சில உரசல்கள் இருந்தது நாம் அறிந்ததே.தற்போது அனைத்து பிரச்சனைகளும் களையப்பட்டு இந்தியா மாலத்தீவு உறவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.புனேவில அனூத் இராணுவ நிலையில் பயிற்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து பல்வேறு சூழ்நிலைகளை பாவித்து பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு குறித்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.இரு நாட்டு இராணுவங்களும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடத்தின.

பயங்கரவாத பயிற்சியின் பகுதியாக வீடுகளில் எப்படி பயங்கரவாதிகளை வீழ்த்துவது என்பது குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காடுகளில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.காடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு எவ்வாறு நடத்துவது என்று இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டன.கெரில்லா போர்முறை குறித்த பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.காடுகளில் மற்றும் நகரங்களில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இந்திய இராணுவம் ஏகப்பட்ட அனுபவம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.