Breaking News

இந்தியா ,வங்கதேசம் கூட்டுப்பயிற்சி-CORPAT-2019

இந்தியா ,வங்கதேசம் கூட்டுப்பயிற்சி-CORPAT-2019

இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.இணைந்து ரோந்து பயணம் செல்லும் போது செய்யவேண்டியவன குறித்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்டோபர் 12ல் தொடங்கிய இந்த பயிற்சிகள் அக்டோபர் 16 அன்று முடிய உள்ளது.

பங்காளதேசம் சார்பில்  BNS Ali Haidar மற்றும் BNS Shadhinota ஆகிய கப்பல்கள் பங்கேற்றன.

இந்திய கடற்படை சார்பில்
 INS Ranvijay மற்றும் INS Kuthar கப்பல்கள் பங்கேற்றன.

 ஐஎன்எஸ் ரன்விஜய்

ஐஎன்எஸ் ரன்விஜய் ஒரு இராஜ்புத் வகை நாசகாரி போர்க்கப்பல் ஆகும்.1987ம் ஆண்டு டிசம்பர் 21ல் படையில் இணைக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் ஒரு வழிகாட்டு ஏவுகணைகள் கொண்ட நாசகாரிபோர்க்கப்பல் ஆகும்.

5000டன்கள் எடையும் ,147மீ நீளமும், 16மீ அகலமும் கொண்ட இந்த போர்க்கப்பல் 30நாட் வேகத்தில் செல்லக்கூடியது.

கப்பலில் 40 அதிகாரிகள் உட்பட 300 மாலுமிகள் உள்ளனர்.கப்பலில் அதிசக்தியுடைய பிரம்மோஸ் மற்றும் பாரக் போன்ற தரை-தரை தாக்கும் ஏவுகணைகள்,வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன.

 தவிர கப்பலில் விமான எதிர்ப்பு துப்பாக்கி,ஏவுகணை எதிர்ப்பு துப்பாக்கி மற்றும் டோர்பிடோ மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன.

கப்பலில் அதிநவீன மின்னனு சாதனங்கள்,சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.தவிர நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறைக்காக ஒரு கா-28 வானூர்தியும் உள்ளது.போரில் வெற்றியை சுவைப்பவன் என்பதே “ரன்விஜய்” என்பதின் பொருளாகும்.கப்பலின் அடையாள சின்னமாக குறுக்காக வைக்கப்பட்ட வாளுடன் பின்பக்கம் நீலவானம் மற்றும் கடலலை உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கப்பலின் கொள்கை  ‘சங்கிரமே வைபவஸ்யா”.இதன் பொருள் “போரில் புகழ்பெற்றது” என கொள்ளலாம்.ஐஎன்எஸ் ரன்விஜய் இந்திய இராணுவத்தின் டோக்ரா ரெஜிமென்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள்:

கப்பல்கள் மற்றும் கடற்பரப்பு இலக்குகளை துல்லியமாக தாக்க 8 பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்ளன.இது தவிர 4  SS-N-2D Styx  கப்பல் எதிர்ப்பு ஏவுகணை உள்ளது.

வான் பாதுகாப்பு மற்றும் கப்பல் பாதுகாப்பிற்காக 8*2 பாரக் ஏவுகணைகள் உள்ளன.தவிர ஒரு
 S-125M ஏவுகணை அமைப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.