பஞ்சாபில் ராணுவ தளங்கள் மீது ஆளில்லாத குட்டி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஃபெரோஸ்புர் பகுதியில் நேற்று பாகிஸ்தானின் ஆளில்லாத குட்டிவிமானம் ஒன்று எல்லை தாண்டி வந்து பறந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை பாகிஸ்தான் அனுப்பி வைப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் பறக்கும் ஆளில்லா விமானங்களை கண்டதும் சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் பாதி எரிந்த நிலையில் விழுந்துக் கிடந்த ஒரு பாகிஸ்தான் குட்டி விமானம் எல்லைக்கு அருகே உள்ள chabhal கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.
Polimer