தீவிரவாத உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் புதுப்பிக்கிறது என்பதற்கான ஆதாரங்களை உலக நிதி நடவடிக்கை பணிக்குழு முன் சமர்ப்பிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்ட கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெற்றது. இதனால் கண்காணிப்பு வளையத்தில் உள்ள பாகிஸ்தான் அரசு, நிதி நடவடிக்கை பணிக்குழு பட்டியலிட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முழுமையாக எடுக்கவில்லை என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா, ஜமாஅத்-உத்-தாவா உள்ளிட்ட குழுக்களுடன் பாகிஸ்தான் தொடர்பில் உள்ளதற்கும் எல்லை தாண்டி தீவிரவாதிகளை ஏவுகிறது என்பதற்கும் தீவிரவாத உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் புதுப்பிக்கிறது என்பதற்கும் தேவையான ஆதாரங்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்களை பாரிஸில் அக்டோபர் 13 முதல் 18 வரை நடக்கவுள்ள உலக நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டத்தில் சமர்பிப்பதன் மூலம் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்த முடியும் என்று மத்திய அரசு தரப்பில் நம்பப்படுகிறது.
Polimer