ஆப்கானிஸ்தான் ராணுவத்தை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டுக்கு 2 அதி நவீன போர் ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.
ஏற்கனவே 2015-16ம் ஆண்டுகளில் 4 ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியது. அவற்றுக்கு மாற்றாக 4 அதிநவீன எம்ஐ-24 ரக அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை பரிசாக வழங்க இந்தியா உறுதியளித்தது. அதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 2 ஹெலிகாப்டகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது.
இந்தியா அளித்த உறுதியின் படி ஆப்கானிஸ்தானுக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள 2 அதிநவீன ஹெலிகாப்டர்களை காபுலில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினைய்குமார் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வழங்கினார்.
இதனைப் பெற்றுக் கொண்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஸதுல்லா ஹலித் கூறும்போது, இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி பயங்கரவாதிகளை ஒடுக்கி ஆப்கன் மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்வோம் என்று கூறினார்.
Polimer