கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணை-தனுஷ்

கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணை-தனுஷ்

இந்தியக் கடற்படையின் தனுஷ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை பற்றி காணலாம்.

கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக் ஏவுகணைகளை மேம்படுத்தியுள்ள உலகின் நான்கு நாடுகளுள் இந்தியாவும் ஒன்று

தனுஷ் என்பது தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணை அல்லது கப்பலில் இருந்து ஏவப்பட்டு கப்பல் இலக்குகளை தாக்கும் ஏவுகணை ஆகும்.நம் பிரித்வி 3 ஏவுகணையின ஒரு வகை தான்.

தனுஷ் அணு மற்றும் மற்ற வெடிபொருள்களை சுமந்து செல்லக் கூடியது.500கிகி இருந்து 1000கிகி அளவுள்ள வெடிபொருளை சுமந்து 350-750 km வரை செல்லக்கூடியது.வெடிபொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க ஏவுதூரம் குறையும்.

பலிஸ்டிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை என்பது அரிது தான்.நகரும் ஒரு இலக்கை பலிஸ்டிக் ஏவுகணை கொண்டு அழிப்பது மிக சிரமம்.ஒரு பெரிய கடினமான பாறை போல தான் பலிஸ்டிக் ஏவுகணை.அதாவது தரையில் நிலையாக உள்ள ஒரு இலக்கை அழிப்பது சுலபம் தான்.பொதுவாகவே ஒரு பலிஸ்டிக் ஏவுகணையை வழிமறித்து வானிலேயே அழிப்பது சிரமம்.ஒரு முறை பலிஸ்டிக் ஏவுகணை இலக்கை தாக்கும் சதவீதம் அதிகம் தான்.

ஆனால் ஒரு நகரும் இலக்கை பலிஸ்டிக் ஏவுகணை அழிக்க வேண்டும் என்றார் அந்த கடினமான பாறை போன்ற ஏவுகணை இலக்கை நோக்கி செல்லும் போதே தனது பாதையை சிறிது நகர்த்த வேண்டும்.அது சிரரம்.க்ரூஸ் ஏவுகணைகள் வளைந்து நெளிந்து சென்று எளிதாக இலக்கை தாக்கும்.அதன் எடை குறைவு.அதிக தூரம் உள்ள இலக்கை தாக்க உங்களுக்கு பலிஸ்டிக் ஏவுகணை தான் தேவைப்படும்.இதன் மேம்பாடும் மிக சிரமம்.எனினும் இந்தியாவும் இதுபோன்ற ஒரு ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது சாதனையே.

அதன் எடை மற்றும் அதிக வெடிபொருள் சுமக்கும் திறன் காரணமாக தாக்கும் கப்பலை சுக்காக நொறுக்கும் திறன் இவை கொண்டுள்ளது.ஒரு விமானந்தாங்கி கப்பலையே கூட அழிக்கலாம் அல்லது குறைந்த பட்சம் அதிக சேதத்திற்கு உட்படுத்தலாம்.

பலிஸ்டிக் ஏவுகணை என்றால் ஒன்றுமே இல்லை ஒரு முறை அதன் பாதையை (இலக்கை ) தீர்மாணித்து ஏவி விட்டால் அவ்வளவு தான்.அது தன் இலக்கை அழித்துவிடும்.இடையின் அதன் பாதையை மாற்றவோ நிறுத்தவோ முடியாது.

அதிக உயரமும் அதிக தூரமும் செல்ல 45 டிகிரி கோணத்தில் ஏவ வேண்டும் என்பது இயற்பியல் விதி.

ஆனால் கப்பல் எதிர்ப்பு பலிஸ்டிக்  ஏவுகணை என வரும் போது துல்லியத்தன்மை தேவை.ஏன் ? இலக்கை நிர்ணயித்து ஏவினால் நகரும் பொருள் நகர்ந்துவிடும்.ஏவுகணை இலக்கை தாக்காது.

எனவே கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட high-performance terminal guidance system, with in-flight updates அல்லது advanced sensors கள் தேவை.

கடந்த 2018ல் தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.