இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை படையில் இணைக்க உள்ள சீனா
எட்டு கடற்சோதனைகளுக்கு பிறகு சீனா சொந்தமாக கட்டியுள்ள முதல் விமானம் தாங்கி கப்பலை படையில் இணைக்க உள்ளது.இந்த கப்பல் படையில் இணையும் பட்சத்தில் இது இரண்டாவது விமானம் தாங்கி கப்பலாக இருக்கும்.
இதற்காக நடக்க உள்ள விழாவிற்கு கடந்த அக்டோபர் 24 அன்று முன்னோட்டம் நடத்தப்பட்டதாக குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
சீனாவிடம் ஏற்கனவே லயோனிங் என்ற கப்பல் உள்ளது.சோவியத் கால கப்பலை மறுகட்டுமானம் செய்து கடந்த 2012ல் தாலியன் தளத்தில் படையில் இணைத்தது.
இதை முழுக்க ரோந்த போன்ற இராணுவத் தேவைகளுக்கு பயன்படுத்தாமல் பயிற்சி கப்பலாக பயன்படுத்தி வருகிறது.
இந்த கப்பலில் தான் சீனா சொந்தமாக மேம்படுத்திய ஜே-15 விமானத்தை சோதித்து வருகிறது.
இந்த வருட இறுதிக்குள் இந்த கப்பல் படையில் இணைக்கப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.உலக அளவில் தனது பெரிய கரங்களை விரித்து தனது பொருளாதார பலத்தை பெருக்க தனது கடற்படை மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது.அதற்காக பிரிகேட்,டெஸ்ட்ராயர் கப்பல்களோடு விமானம் தாங்கி கப்பல்களையும் சீனா கட்டி வருகிறது.
இரண்டாம் கப்பல் சோதனையில் இருக்கும் நேரத்திலேயே மூன்றாவது கப்பலின் கட்டுமானத்தை அசுர வேகத்தில் நடத்தி வருகிறது.
கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு விமானம் தாங்கி கப்பல்களை சீனா கட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மே மாதம் மட்டும் சீன கடற்படை இரு guided missile destroyers படையில் இணைத்து இந்த ரக கப்பல்களின் எண்ணிக்கையை 20ஆக உயர்த்தியுள்ளது.
சீனாவிடம் தற்போது 20 Type 052D கட்டுமானத்திலோ அல்லது படையிலோ இணைக்கப்பட்டுள்ளது.
தன் பொருளாதார பலத்தை நிலைநிறுத்த வலிமையான கடற்படையின் அவசியத்தை சீனா நன்கு உணர்ந்துள்ளது.