காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் பேச்சைக் கேட்டு இதில் தலையிட வேண்டாம் என்றும் சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங் சென்றதும், அங்கு சீன அதிபர் ஜி-ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்திய போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதும் தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வரும் நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து வேறு எந்த ஒரு நாடும் கருத்து கூற முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.