Breaking News

செயல்பாட்டுக்கு வந்த வானில் ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை

செயல்பாட்டுக்கு வந்த வானில் ஏவக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை

வானில் ஏவக்கூடிய நீண்ட தூரம் செல்லக்கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

450 km தூரத்தில் உள்ள தரை இலக்குகளை அழிக்க கூடிய இந்த air-launched anti-surface weapon இந்திய விமானப்படைக்கு ஆகப் பெரிய  ஸ்டேன்ட் ஆப் பலத்தை அளிக்கும்.

இந்த ஏவுகணைகளை தற்போதைக்கு சுகாய் விமானங்கள் ஏவும்.இதற்கென தேர்தெடுக்கப்பட்ட சுகாய் விமானங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.கிட்டதட்ட  42 Su-30MKIs விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணையை ஏவக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.ஒரு பிரம்மோஸ் ஏவுகணையுடன் நான்கு R-77/Astra air-to-air medium range missiles, நான்கு R-73 air-to-air short range missiles மற்றும் six 250 kg bombs ஆகியவற்றை சுமந்து செல்லும்.

விமானப்படையில் அனைத்து   Su-30MKI squadron-களுக்கும் பகிர்ந்து இந்த மாற்றியமைக்கப்பட்ட சுகாய் விமானங்கள் வழங்கப்படும்.மேலும் சில விமானங்கள் ரிசர்வில் வைக்கப்படும்.

450கிமீ தூரம் செல்லும் என்பதால்  இந்தியாவின் வான் பகுதியில் இருந்தே இந்த ஏவுகணையை ஏவ முடியும்.பாலக்கோட் தாக்குதல் போல பாக்கிற்குள் செல்ல வேண்டியதில்லை.அதாவது நமது எல்லையில் பறந்தவாறே எதிரியின் 400+கிமீ உள்ள தரை இலக்குகளை அழிக்கலாம்.

இதன் 2.8 Mach supersonic speed மற்றும் terrain-hugging flight mode காரணமாக இந்த ஏவுகணையை இடைமறிப்பது மிக கடினம் ஆகும்.
கடைசியாக நடத்தப்பட்ட சோதனைகளில் தனது துல்லியத்திறனை வெளிப்படுத்தியாதோடு கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைளில் ஆகச் சிறப்பாக செயல்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.