ஆயுதத் தயாரிப்பில் டி.ஆர்.டி.ஓ.வும், ராணுவமும் இணைந்து செயல்பட அழைப்பு

எதிர்காலத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான ஆயுதங்களுடன் போர்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்
பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.வின் 41-வது மாநாட்டில் பேசிய அவர், டி.ஆர்.டி.ஓ. தனது 52 ஆய்வகங்களின் உதவியுடன் விமானப்படை, ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆயுதங்கள், ஏவுகணைகள், மின்னணுவியல் ஆயுதங்கள் ஆகியவை தொடர்பான உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை மேம்படுத்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். 
எதிர்காலத் தொழில்நுட்பம் கணினி, வானவியல் தொழில்நுட்பம், லேசர், மின்னணுவியல் சார்ந்த ஆயுதங்கள் மற்றும் ரோபோக்கள் அடிப்படையிலானதாக இருக்கும் என்றும், அது தொடர்பான ஆயுதங்களை தயாரிக்க இந்தியா தயாராக வேண்டும் என்றும் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.