இந்திய ராணுவத்தில் இணைந்த இஸ்ரேல் நவீன ஏவுகணை


டாங்குகளை தாக்கி அழிக்கும், இஸ்ரேலில் தயாரான அதிநவீன ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டன. 

ISRAEL Spike anti tank missile  பெயரிடப்பட்ட, டாங்குகளை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணைகள், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி நிறுத்தப்பட உள்ளன. அவசர தேவையை கருத்தில் கொண்டு, இந்த ஏவுகணைகளை குறைந்த அளவு கொள்முதல் செய்ய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. டி

தயாரித்து வரும் அதிநவீன ஏவுகணைகள் தயாராகும் வரை இஸ்ரேல் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.

பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர தேவையை கருத்தில் கொண்டு, ராணுவ துணை தளபதி, தனக்கு உள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தை பயன்படுத்தி 210 ஸ்பைக் ஏவுகணைகளை கொள்முதல் செய்துள்ளார். 

இது 10 நாட்களுக்கு முன்னர் இந்தியா வந்துவிட்டதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Dinamalar

Leave a Reply

Your email address will not be published.