ரபேல் விமானங்களால் தெற்காசியாவில் இந்திய விமானப்படையின் மேலாதிக்கம் ஏற்படும்




அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு வாங்கப்படும் ரபேல் போர் விமானங்கள், தெற்காசியாவில் இந்திய விமானப்படை மேலாதிக்கம் செலுத்த வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனமான எம்.பி.டி.ஏ. தெரிவித்துள்ளது. 
இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் கடந்த 50 ஆண்டுகளாக அந்த நிறுவனம் ஏவுகணைகளை தயாரித்து அளித்து வருகிறது. அந்நிறுவனத்தின் இந்திய கிளையின் தலைவர் லூயிக் பெடிவாசே அளித்துள்ள பேட்டியில்  இந்திய விமானப்படையிடம் தற்போது இல்லாத நவீன தளவாடங்கள் பொருத்தப்பட்டு ரபேல் விமானங்கள் வாங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அதி நவீன மீடியர், ஸ்கால்ப் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு ரபேல்  விமானங்கள் வாங்கப்படுகிறது என்றும், இது இந்திய விமானப்படையின் போர் திறனை பலமடங்கு அதிகரிக்க செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தெற்காசிய பிராந்தியத்தில் இந்திய விமானப்படையின் மேலாதிக்கம் ஏற்பட அவை வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸிடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. முதல் போர் விமானம், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட இருக்கிறது. அந்த விமானங்கள், எம்.பி.டி.ஏ. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மீடியர், ஸ்கால்ப் ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு வாங்கப்படுகின்றன
Polimer

Leave a Reply

Your email address will not be published.