சாதனைக்கு மேல் சாதனை புரியும் சுபேதார் ஆனந்தன் குணசேகரன்

சாதனைக்கு மேல் சாதனை புரியும் சுபேதார் ஆனந்தன் குணசேகரன்

சுபேதார் ஆனந்தன் குணசேகரன் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டியில் மூன்று தங்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார்.

சுபேதார் ஆனந்தன் குணசேகரன் சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டியில் 100மீட்டர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.

இத தவிர 200 m, மற்றும் 400-m போட்டியில் தங்கம் வென்றுள்ளார். 100m போட்டி 12.00 seconds, 200m போட்டி 24.31 seconds மற்றும் 400m in 53.5 seconds முடித்து தங்கம் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் கும்பகோணம் பகுதியை சேர்ந்த இவர் ராணுவத்தில் இணைந்து தேசப்பணியில் ஜம்மு காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் நவ்காம் செக்டாரில் ரோந்து செல்லும் போது கண்ணிவெடி வெடித்து தனது இடது காலை இழந்தார்.

பின்னர் இந்திய ராணுவத்தின் உதவி மற்றும் ஊக்கத்துடன் விளையாட்டு வீரராக களமிறங்கினார். தற்போது சர்வதேச அரங்குகளில் மறுபடியும் தேசத்தின் நன்மதிப்பை உயர்த்தி வருகிறார்.
இவர் இந்தியாவிலேயே வேகமான Blade runner ஆவார்.

#ஜெய்ஹிந்த்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

Leave a Reply

Your email address will not be published.