குஜராத் மாநிலம் கட்ச் அருகே பாகிஸ்தானை சேர்ந்த இரு படகுகளை ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளனர்.
ஆளின்றி கிடந்த அந்த படகுகள் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியாவில் பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இரு நாட்டு எல்லை பகுதியான சர் கிரிக் நீரிணையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டாபா கிரிக் என்ற இடத்தில் இரு படகுகள் மட்டும் ஆளின்றி நிறுத்தப்பட்டிருந்தன. அந்த படகுகள் கைப்பற்றிய வீர ர்கள் ஆய்வு மேற்கொண்ட போது, அவை பாகிஸ்தானைச் சேர்ந்தவை என்பது தெரியவந்த து. அவை மீன்பிடி படகுகள் என்ற போதிலும், அதில் பல நாட்கள் பயணம் செய்வதற்கு ஏற்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை இருந்தன.
இதனால் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள், அந்த படகு வழியாக ஊடுருவி இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படை முடுக்கி விட்டுள்ளது.