பயங்கரவாதிகள் பிடியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர்: ராவத்
புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
டில்லியில் அவர் கூறுகையில், கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் குறித்து நாம் பேசும் போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தானையும் சேர்த்து தான் பேசுகிறோம். இதனால், அந்த பகுதியை , நமது மேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடு சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. ஆனால், அந்த பகுதி அந்த பகுதி பாகிஸ்தான் அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படவில்லை. பயங்கரவாதிகள் கட்டுப்படுத்துகின்றனர். பாகிஸ்தானின் ஒரு அங்கமான பயங்கரவாதிகள் கட்டுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதி, தற்போது அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவத்தின் காலாட்படைக்கு உலகின் மிகச்சிறந்த ரைபிள் துப்பாக்கியான அமெரிக்க தயாரிப்பு சிக் சாயர் (Sig Sauer), இந்த ஆண்டின் இறுதிக்குள் அளிக்கப்படும் என்றும் ராவத் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்று என்றும், இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பல்டிஸ்தானும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த பகுதிகளில், கில்ஜித் பல்டிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீரும் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்றும் ராவத் குற்றம்சாட்டினார்.