இன்று லெப்.பார்த்திபன் அவர்களின் நினைவு தினம்

இன்று லெப்.பார்த்திபன் அவர்களின் நினைவு தினம்

” Have nothing to offer but blood, toil, tears and sweat, then you will not be ashamed to look at the mirror ……..”

இன்று லெட்.பார்த்திபன் கீர்த்தி சக்ரா, 5 JAKLI அவர்களின் நினைவு தினம் ஆகும்.

அன்று 7 October, 2006  இதே நாளில் வீரத்திற்கு எடுத்துக் காட்டாக வீரமரணம் அடைந்தார் நமது மண்ணின் மைந்தர்.

1983 ஆகஸ்ட் 21 இராஜபாளையத்தில் மேஜர் வி.நடராஜன் மற்றும் தமிழ்ச்செல்வி தம்பதியருக்கு மகனாய் இம்மண்ணில் உதித்தார் அந்த மாவீரன்.

நாட்டிற்கு சேவை செய்தே தீர வேண்டும் என்ற தீரா ஆசையுடன் 18 மார்ச் 2006ல் படையில் (5 வது ஜம்மு காஷ்மீர்) இணைந்தார். குப்வாராவில் உள்ள நனின் நிலையில் தனது இராணுவ வாழ்க்கையை தொடங்கினார்.

அன்று 7 அக்,2006 ,12 பேர் கொண்ட பாக் தீவிரவாத குழு லெப்.பார்த்திபன் அவர்களின் நிலைக்கு அருகே வருவதை கண்டார். எட்டு மணி நேரம் அவரும் அவரது வீரர்களும் அந்த தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டனர். மூன்று தீவிரவாதிகளை எளிதாக வீழ்த்தினார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு பலத்த குண்டடி காயம் ஏற்பட்டது.ஒரு குண்டு அவரது நெஞ்சை துளைத்து சென்றிருந்தது.படையில் சேர்ந்து வெறும் 6 மாதங்களே ஆன நிலையில் லெப்.பார்த்திபன் வீரமரணம் அடைந்தார்.

அவரது ஈடு இணையற்ற தியாகம்,வீரம், தலைமைத்துவம் காரணமாக இராணுவம் அவருக்கு கீர்த்தி சக்ரா அளித்து நெஞ்சை நிமிர்த்தியது.

Lest we forget Lieutenant Parthiban

மிக இளவயதில் கீர்த்தி சக்ரா விருது பெற்றவர் இவர் தான்.தனது 23வது வயதில் நாட்டிற்காக உட்சபட்ச தியாகம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.