இராணவத்திற்கு ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் தேவை

இராணவத்திற்கு ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் தேவை

எல்லைக் கோட்டு பகுதியில் ( Line of Control ) பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க  anti-personnel mines எனப்படும் கண்ணிவெடிகள் ஒரு மில்லியன் என்ற அளவில் தேவையாக உள்ளது.இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகும் பட்சத்தில் ஒரே ஆர்டரில் இவ்வளவு கண்ணிவெடிகள் வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

தற்போது எந்த தனியார் நிறுவனமும் கண்ணிவெடிகள் தயாரிக்கவில்லை.தற்போது இராணுவம் உபயோகப்படுத்தும் கண்ணிவெடிகளை  Ordnance Factory Board (OFB) தான் தயாரித்து வழங்குகிறது.

எனவே தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொள்ளலாம்.தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் ஐந்து வருட காலம் என்ற அளவில் இராணுவத்திற்கு ஒரு மில்லியன் கண்ணிவெடிகள் தயாரித்து வழங்க வேண்டும்.

இந்தியாவில் சில நிறுவனங்கள் கூட  anti-personnel mines உடைய பகுதி பொருள்களை  OFB-க்கு தயாரித்து வழங்குகின்றன.இந்த நிறுனங்கள் நேரடியாக இந்த திட்டத்தில் பங்கெடுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Non Metallic Mine (NMM) 14 type of device with a shelf life of at least 10 years என்ற அளவில் அந்த கண்ணிவெடிகள் இருத்தல் வேண்டும்.வருடத்திற்கு இரு லட்சம் என்ற வேகத்தில் கண்ணிவெடிகளை தயாரித்து வழங்க வேண்டும் .

Leave a Reply

Your email address will not be published.