ஐ.எஸ்.பயங்கரவாத தலைவன் கொலை

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி நாயைப் போல மரணத்தை தழுவினான் என்றும் அவன் ஒரு கோழையைப் போல் அழுதபடி உயிரிழந்தான் எனவும் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அல்பக்தாதியால் மனித குலத்திற்கு இனி எந்த வித அச்சுறுத்தலும் இருக்காது என்று கூறியுள்ளார்.
சிரியாவில் ஐ.எஸ். இயக்கம் ஆளும் அரசுக்கு எதிரான தீவிரவாத வன்முறைகளில் ஈடுபட்டு வந்தது. ஒசாமா பின்லேடனுக்கு அடுத்து மிகப் பெரிய தீவிரவாத இயக்கத் தலைவனாக அறியப்பட்ட அபு பக்கர் அல் பக்தாதி கொடூரமான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
குண்டுவெடிப்புகள், தாக்குதல்களில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமானோர் உயிரிழக்க காரணமாக இருந்தவன் பக்தாதி. 2010ம் ஆண்டு முதல் ஐ.எஸ். இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மிகப்பெரும் எதிரியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தான். இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் மிகப்பெரிய விஷயம் ஒன்று நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அபுக்கர் பக்தாதி கொல்லப்பட்ட தகவல் உலகம் முழுவதும் ஊடகங்களில் கசிந்தது. இதனை உறுதி செய்த டிரம்ப் அபுபக்கர் பக்தாதி ஒருநாயைப் போல் கொல்லப்பட்டான் என்று அறிவித்தார்.
அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியாவின் பரிஷா பகுதியில் அவன் மறைந்திருந்த ஒரு வீட்டை முற்றுகையிட்டு குண்டுகளை வீசிய போது உயிருக்கு அஞ்சி கதறி அழுத பக்தாதி ஒரு கோழையைப் போல தப்பி ஓட முயற்சித்ததாகவும் சுரங்கம் வழியாக தப்ப முயற்சித்ததாகவும் அது நிறைவேறாததால் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து தமது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் இப்போது பாதுகாப்பான இடமாகி விட்டது என்றும் பக்தாதியால் இனி எந்த ஒரு மனித உயிருக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
Polimer

Leave a Reply

Your email address will not be published.