உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ரேடார் அமைப்புகளால் ஈர்க்கப்பட்டேன்: விமானப்படை தளபதி

உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ரேடார் அமைப்புகளால் ஈர்க்கப்பட்டேன்: விமானப்படை தளபதி

செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய விமானப்படை தளபதி உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட நிறைய  ரேடார் அமைப்புகள் முழு திருப்தி அளிப்பதாகவும் ,ரேடார் தொழில்நுட்ப மேம்பாட்டில் கிட்டதட்ட 100% உள்நாட்டு அமைப்புகளால் தயாரிக்கப்படுவதாமவும் அதற்காக  DRDO-க்கு வாழ்த்து கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.இனி இதற்காக வெளிநாடுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியமல்ல என்றும் கூறியுள்ளார்.

 Low-Level Transportable Radar (LLTR) ‘Ashwini’ மற்றும் Medium Power Radar (MPR) ‘Arudhra’ என இரண்டுமே விமானப்படைக்காக மேம்படுத்தப்பட்டு படையில் இணைக்கப்பட்டு எல்லையில் பல்வேறு நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Low-Level Transportable Radar (LLTR) ‘Ashwini’ ஒரு தரை சார்ந்த
 S-band rotating fully active phased array radar system ஆகும்.வான் பகுதி கண்காணிப்பு ரேடார் ஆகும்.எதிரியின் வான் இலக்குகளை கண்டுபிடிப்பதுடன் அவற்றை தொடர்ந்து கண்காணிக்கவும் செய்யும்.எலக்ட்ரானிக் போர்முறைகளில் ரேடார் எதிர்ப்பு கருவிகளால் பாதிகப்படாத அளவு சிறப்பாக செயல்பட வல்லது.

Medium Power Radar (MPR) ‘Arudhra’ நாட்டிலேயே முதன் முறையாக உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட  fully active aperture, rotating, multibeam, multifunction phased array radar with staring mode ஆகும். மிக மிக குறைந்த RCS கொண்ட இலக்குளை கூட துல்லியமாக கண்டறிந்து கண்காணிக்க வல்லது.

தேஜஸ் விமானத்திற்காக  ‘Uttam’ airborne fire control radar ஒன்றையும் டிஆர்டிஓ மேம்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.