தொடர் அணு ஏவுகணைச் சோதனைகளை மேற்கொள்ள உள்ள டிஆர்டிஓ

தொடர் அணு ஏவுகணைச் சோதனைகளை மேற்கொள்ள உள்ள டிஆர்டிஓ

இந்தியாவின் Defence Researc Development Organisation (DRDO) அடுத்த வருடத்திற்கான ஏவுகணை சோதனைகள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.அதில் 5,000-km தொலைவு செல்லும் surface-to-surface ballistic missile Agni-V படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தவிர நீண்ட தூரம் செல்லும் Submarine Launched Ballistic Missile (SLBM) K-5 சோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்தியாவின் இரகிய ஏவுகணை மேம்பாட்டு திட்டமாக  ‘K Series’ புரோஜெக்டின் கீழ் கே-5 நீர்மூழ்கி ஏவு பலிஸ்டிக் ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது.கே வகை நீர்மூழ்களிலேயே வேகமானதும் நவீமானதுமான இந்த கே-5 ஏவுகணை அணு வார்ஹெட்டை ( nuclear warhead) 5000கிமீ தூரத்திற்கு சென்று சேர்க்கும் திறனுடையது.கே என்பது நம் முன்னாள் குடியரசு தலைவர் கலாம் அவர்களை குறிக்கும் என்பது கூடுதல் தகவல்.

மூன்று நிலை solid propellants உதவியுடன் எதிரி வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கூட முறியடிக்க வல்லது.

 750-km தூரம்செல்லும்  K-15 (B-05) மற்றும் 3,500 km தொலைவு செல்லும் K-4 ஆகியவை பல முறை வெற்றிகரமாக சோதனை  செய்யப்பட்டுள்ளது. அவையனைத்தும் படையில் இணையும் வேளையில் உள்ளது.

submersible pontoon launcher-ல் இருந்து ஏவுகணை ஏவி சோதனை செய்யப்படும்.விசாக் கடற்கரை பகுதியில் குறைந்த தூரத்திற்கு ஏவி சோதனை செய்யப்படும்.புதிய தொழில்நுட்பங்கள் இதில் சோதனை செய்யப்படும்.முதற்கட்ட சோதனைகள் தயாராகி வருகின்றன.

இராணுவப்படைகளுக்குள் இணைவதற்கு முன்பே ஏவுகணை பலகட்ட சோதனைக்கு உள்ளாக்கப்படும்.இந்தியாவின்  S4 nuclear powered submarine இந்த ஏவுகணையை பெறும் அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில்..அரிகந்த் கே-15 மற்றும் கே-4 ஏவுகணைகளை எதிர்காலத்தில் பெறும்.

ஆனால் K-5 சோதனைக்கு முன்பே DRDO நிறுவனம் surface-to-surface tactical Short Range Ballistic Missile (SRBM) ஏவுகணையான பிரலே ஏவுகணையை சோதனை செய்ய உள்ளது.

ஐந்து டன்கள் எடையுடைய இந்த பிரலே ஏவுகணை 500கிமீ துரமுள்ள இலக்கை தாக்கி அழிக்கும்.இது China’s Dongfeng 12 மற்றும் Russia’s 9K720 Iskander ஏவுகணைகளை ஒத்தது.

அடுத்து  4,000கிமீ தூரம் செல்லும்   Agni-IV ஏவுகணை சோதனை செய்யப்படும்.வரும் டிசம்பர் 26ல் இந்த சோதனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.