சீன பாக் எல்லை நோக்கி நகர்த்தப்படும் உள்நாட்டு தயாரிப்பு தனுஷ் பீரங்கி

சீன பாக் எல்லை நோக்கி நகர்த்தப்படும் உள்நாட்டு தயாரிப்பு தனுஷ் பீரங்கி

இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள தனுஷ்  155mm Dhanush Towed Artillery Gun இந்தியா-பாக் மற்றும் இந்தியா-சீனா எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 155mm Dhanush Towed Gun System படையில் இணைக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் இந்திய இராணுவத்தில் ஆர்டில்லரி பிரிவின் பலம் அதிகரிக்கப்படும்.

 114 `Dhanush’ ஆர்டில்லரிகள் தறபோது ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.இவற்றை இந்தியாவின் Ordnance Factory Board (OFB) தயாரிக்கும்.

இந்த வருட முடிவுக்குள் OFB  18 155mm x 45 calibre artillery guns-களை தயாரித்து வழங்கும்.இவை பாக் மற்றும் சீன எல்லைக்கு அருகே நிலை நிறுத்தப்படும்.இந்த ஆர்டில்லரிகள்  Jabalpur-based Gun Carriage Factory (GCF) பேக்டரியில் தயாராகும்.

சிக்கிம்,லே,ஒடிசா மற்றும் ஜான்சி என இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த பீரங்கி கோடைக்கால மற்றும் குளிர்கால சோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கியின்  85 சதவீத  பாகம் உள்நாட்டு மெட்டீரியல்களால் மேம்படுத்தப்பட்டுள்ளது. 38 km தூரம் உள்ள இலக்குகளை தாக்க வல்லது.இந்த புராேஜெக்டில் OFB தவிர SAIL, BEL போன்ற தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன.

சில தகவல்கள்

– இந்த பீரங்கியில் inertial navigation-based sighting system உள்ளது.

– இரவு பகல் என எந்த காலத்திலும் சுட முடியும் .

– On-board ballistic computation.

–  NATO standard 155 mm ammunition களை சுடும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.