புதிய ஏவுகணைகளை வெளிஉலகுக்கு காட்டிய சீனா- அமெரிக்க இராணுவத்தை விஞ்சுகிறதா ?

புதிய ஏவுகணகளை வெளிஉலகுக்கு காட்டிய சீனா- அமெரிக்க இராணுவத்தை விஞ்சுகிறதா ?

சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்ட 70ம் ஆண்டு தின பரேடு பெய்ஜிங்கில் நடைபெற்றது.இந்த பரேடில் சீனா தனது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளிட்டு பல புதிய தளவாடங்களை அணிவகுக்க செய்தது.இந்த புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அமெரிக்காவே கூட தடுத்து அழிக்க முடியாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

நாடு அமைதியான முறையில் வளர்சியடையும் என சீன அதிபர் தன் உரையில் குறிப்பிட்டார்.ஆனால் இராணுவம்  நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

அணிவகுப்பின் போது 15000 வீரர்கள் தியானன்மென் சதுக்கத்தில் அணிவகுத்துச் சென்றனர்.வண்ணங்களை அள்ளித் தெளித்து போர்விமானங்கள் வானில் பறந்தன.

இந்த அணிவகுப்பின் போது சீனா தனது பலத்தை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளது.

எதிர்பார்த்தது போலவே புதிய ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிநவீன கண்டம் விட்டு கண்டம் தாவும் ( advancing intercontinental and hypersonic missiles) மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வெளி உலகுக்கு காட்டியது.இவை பெரிய விமானம் தாங்கா கப்பல்களை அழிக்கும் திறனுடையவை.

தவிர மற்றும் ஒரு “carrier killer” எனப்படும் Dongfeng-21D (DF-21D),
ஏவுகணையை அணிவகுப்பில் காட்டியது.1500கிமி தொலைவில் வரும் போர்க்கப்பல்களை தாக்க வல்லது. DF-26 intermediate range missile (இடைத்தூர ரக ஏவுகணை) ஆகும். “Guam killer” என அழைக்கப்படும் இந்த ஏவுகணை அமெரிக்காவின்
 U.S. Pacific island base-ஐ குறிப்பதாக உள்ளது.

மேலும் People’s Liberation Army (PLA)  DF-17 எனப்படும் ஹைப்பர் சோனிக் ஏவுகணையையும் காட்டியது.தியரி படி ஒலியின் வேகத்தில் இந்த ஏவுகணை manoeuvre (வளைந்து நெளிந்து பறத்தல்) செய்யக்கூடியதாய் இருக்கும்.இதனால் இதை சுட்டு வீழ்த்துவது சிரமமாக இருக்கலாம்.

ஜப்பான் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் திறனை இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை கேள்விக்குறியதாக ஆக்குகிறது என முன்னாள் ஜப்பான் பாதுகாப்பு அதிகாரி கூறுகிறார்.

இதற்காக புதிய சக்திமிக்க  ballistic missile defence system-ஐ அமைப்பது முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த ஏவுகணைக்கு அடுத்து
 16 upgraded launchers carrying DF-41 intercontinental ballistic missiles-ஐ காண முடிந்தது.சீனாவின் அணு ஏவுகணையின் முதுகெலும்பு இவை. multiple nuclear warheads உடன் அமெரிக்காவை தாக்க வல்லது இவை.

மேலும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்ற  40% தளவாடங்கள் புதியவை. நீண்ட தூரம் செல்லும் நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படக்கூடிய ( long-range submarine-launched and ship-based YJ-18A anti-ship cruise missiles) YJ-18A கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் இடம்பெற்றன.

 ஆனால் இடம்பெற்ற அனைத்துமே முழு பலத்துடன் படையில் இணைந்திருக்குமா என்பது சந்தேகமே.இதில் இடம்பெற்ற பல ஆயுதங்கள் முன்மாதிரிகளாக இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 எடுத்துக்காட்டாக Gongji-11 என்று அழைக்கப்படும் ஒரு ஆளில்லா விமானம்  Sharp Sword drone என்றழைக்கப்படும் 2013ல் சோதனை செய்யப்பட்ட விமானத்தின் இறுதி செய்யப்பட்ட வகை என்கின்றனர்.2013க்கு பிறகு இப்போது தான் வெளி உலகுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

வானிலேயே எரிபொருள் நிரப்புவது போல விமானங்கள் பறந்தன. அமெரிக்காவின் U.S. UH-60 Black Hawk-ஐ காப்பி அடித்து செய்யப்பட்ட  Z-20 medium lift helicopter பறந்தது .

இந்த அணிவகுப்பு அமைதி மற்றும் ஜனநாயகத்தை அச்சுறுத்துவது போல உள்ளதாக தைவான் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.