5000 சீன வீரர்களை எதிர்த்து நின்ற 120 இந்திய வீரர்கள்.

 

5000 சீன வீரர்களை எதிர்த்து நின்ற 120 இந்திய வீரர்கள்.
1962 போரில் ரேசங் லா என்னுமிடத்தில் இந்திய போஸ்டை குமாஒன் ரெஜிமென்டை சேர்ந்த வெறும் 120 வீரர்கள் காவல் காத்து நின்றனர்.1962 போரில் லடாக்கில் உள்ள ரேசங் லா என்னுமிடத்தை குமாஒன் ரெஜிமென்ட்டை சேர்ந்த வீரர்கள் 121 பேர் மேஜர் சைதான் சிங் தலைமையில் காவல் காத்திருந்தனர்.
சீனப்படை பெரிய அளிவிலான ஆயுதங்கள் (7.62 mm self-loading rifles; MMG’s and LMG’s; 120 mm, 81 mm and 60 mm mortars; 132 mm rockets; and 75 mm and 57 mm recoilless guns to bust bunkers, tanks, and cannons loaded on jeeps )கொண்டு இந்திய நிலையை தாக்கி ரேசங் லாவை கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருந்தனர்.
5000 சீன வீரர்கள் ஆர்ட்டில்லரி மற்றும் பெரிய மெசின் துப்பாக்கிகளுடன் அலை அலையாய் அந்த போஸ்டைதாக்க தொடங்கினர். மேஜர் சைதான் இராணுவத்திடம் மேலதிக படைகளை அனுப்ப கோரினார் மேலும் தோட்டாக்கள் வழங்க கோரினார்.அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவரை பின்வாங்க சொல்லியது இராணுவம்.ஆனால் மேஜர் மறுத்தார்.இத்தனை வருடங்கள் எதைப் பாதுகாக்க இங்கு இருந்தோமோ அதைக் காப்பாற்றாமல் இங்கிருந்து வரமாட்டோம்.எங்களுக்கு உணவளித்த ரேசங் லாவை எதிரிகள் கைப்பற்ற விடமாட்டோம் என கூறினார்.தனது சக வீரர்களிடமும் கூறினார்.அதற்கு அவர்கள் Rezang la has served us food for years and now it is time for us to protect it, Sheer sahab we too would stand firm with you and fight to protect Rezang la” எனப் பதிலளித்தனர்.
பெரும் அலையாய் திரண்டு வந்த சீ்னர்களை எதிர்க்க தயாரானது நமது சிறு படை.மேஜர் சைதான் சிங் தனது வீரர்களிடம் யாரும்சீனர்களை தொலைவில் வரும் போது தாக்க வேண்டாம்.அவர்கள் பக்கத்தில் வரும் போது தாக்குங்கள் அப்போது தான் தோட்டாக்கள் வீணாகாமல் சீனர்களை தாக்கும் என்றார்.
நம் வீரர்களிடம் ஆர்ட்டில்லரி உதவி இல்லை.ஏன் சொல்லிக்கொள்ளும் படி ஒரு மெசின் துப்பாக்கி கூட இல்லை.சில துப்பாக்கிகள் மற்றும் சிறிய வகை மெசின் கண் உதவியுடன் சீனப் படையை எதிர்க்க தொடங்கினர்.
முதல் அலை சீன வீரர்களை எதிர்த்து நின்று போராடினர்.சீனாவிற்கு இழப்பு. சீனர்கள் குழம்பினார்கள்.நமது கணிப்பு தவறாகிப்போனது எனவும்,கிட்டத்தட்ட 5000 இந்திய வீரர்கள் இருப்பது போல தெரிகிறது என தலைமையிடத்தில் புலம்பினார்கள்.மீண்டும் மேலதிகப் படை மற்றும் ஆயுதங்களுடன் தாக்கினர்.
இரண்டாவது அலையாக அடுத்த குழு தாக்க தொடங்கியது.இப்போதும் அவர்களுக்கு இழப்பு
மூன்றாவது குழு இந்திய போஸ்டை தாக்க தொடங்கிய போது இந்திய வீரர்களிடம் இருந்த தோட்டாக்கள் முடிவடைந்திருந்து.பின் வெறும் கைகளாலேயே சீன வீரர்களை தாக்க தொடங்கினர்.ஹரியாணாவைச் ராம் சிங் மற்றும்  குலாப் சிங்  ஆகிய இரு வீரர்களிடம் தோட்டாக்கள் முடிவடைந்திருந்தது.கையில் இருந்த கத்தியை எடுத்து சீனர்களை வெறும் கைகலால் தாக்க தொடங்கினர்.சீனர்களின் தொண்டைகள் கிழிக்கப்பட்டன.
இந்த ரேசங் லா போரில் கிட்டத்தட்ட 1300 சீன வீரர்களை கொன்று குவித்தனர் நம் வீரர்கள். நம் 121 வீரர்களில் 109 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
போரில் தலைமை தாங்கிய வீரர் மேஜர் சைதான் சிங் அவர்களின் உடல் தோட்டாக்கள் துளைத்து உயிரற்று கிடந்தது.அவர் சீன வீரர் ஒருவரின் இயந்திரத் துப்பாக்கியை பறித்து சீனர்களை நோக்கி சுட்டிருந்தார்.உயிரி பிரிந்த பின்பும் துப்பாக்கி ட்ரிகரை அழுத்திய படியே கிடந்தார்.பாருங்கள் எவ்வளவு வீரர் என்று!!!
இதையல்லவா நாம் பாடப் புத்தகத்தில் கற்றிருக்க வேண்டும்.போரில் வென்ற வெளிநாட்டவர்கள் பற்றி படிக்கிறோமே தவிர நாட்டுக்காக உயிரை துறந்த நமது வீரர்களின் வீரங்கள் பற்றி நமது குழந்தைகளு்க்கு சொல்லிக் கொடுப்பதில்லை.
அந்த 121 வீரர்களால் தான் இன்று லடாக் இந்தியாவில் உள்ளது.நம்மிடம் போதிய ஆயுதம் இல்லை நாம் வீழ்வோம்,நாம் கொல்லப்படூவோம் என்ற எந்த பயமும் இன்றி மோதிப்பார்ப்போம் என நெஞ்சை நிமிர்த்தி நின்றார்களே அவர்கள் தான் இந்த மண்ணில் மைந்தர்கள்.
இன்று பல பேர் கூறுவது என்ன??
சீனர்கள் நிறைய ஆயுதம் வைத்துள்ளனர்.நாம் போரிட்டால் நமக்கு இழப்பு தான் என எதிர்மறையாக பேசுகின்றர்.அன்றும் இதே தான்.அந்த வீரர்கள் பின்வாங்கியிருந்தால் இன்று லடாக் அவர்கள் வசம் தானே..அவன் ஆயுதம் வைத்திருக்கிறான் என தெரிந்து வெறும் கைகலால் போரிட்டு நம்மை காப்பாற்றியிருக்கிறார்கள்.
போரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக கம்பெனி கமாண்டர் மேஜர் சைதான் சிங் அவர்களுக்கு பரம் வீர் சக்ரா விருதளிக்கப்பட்டது
அந்த 121 வீரர்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவோம்

Leave a Reply

Your email address will not be published.