40,000 உள்நாட்டு தயாரிப்பு குண்டுதுளைக்கா உடைகள் இராணுத்திற்கு டெலிவரி

40,000 உள்நாட்டு தயாரிப்பு குண்டுதுளைக்கா உடைகள் இராணுத்திற்கு டெலிவரி

காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இராணுவ வீரர்களுக்கு 40,000 bulletproof jackets டெலிவரி செய்யப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே இந்த உடைகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என Major-General Anil Oberoi (Retd) of SMPP Pvt Ltd அவர்கள் கூறியுள்ளார்.

இந்த வருடத்திற்குள் நாங்கள் 36,000 உடைகள் அளிக்க வேண்டும்.ஆனால் நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே 40,000 jackets அளித்து விட்டோம் என கூறியுள்ளார்.ஆர்டரை  2021க்குள் முடிக்க வேண்டும் ஆனால் 2020க்குள் முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

 கடந்த வருடம் உள்நாட்டு நிறுவனமான   SMPP Limited-க்கு 1.8 லட்சம் உடைகள் தயாரித்து வழங்கும் ஆர்டரை பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியிருந்தது.

இந்த உடைகள் கான்பூரில் உள்ள Central Ordnance Depot-க்கு அனுப்பப்பட்டு அதன் பிறகு காஷ்மீருக்கு அனுப்பப்படும்.

AK-47 rifle துப்பாக்கியில் இருந்து செலுத்தப்படும் steel ammunition (ஸ்டீல் குண்டுகளை) கூட இந்த உடை தாங்கும் என கூறப்பட்டுள்ளது.இந்த ஸ்டீல் புல்லட்டுகள் நன்கு வடிவமைக்கப்பட்ட உடைகளை கூட துளைக்க வல்லது எனினும் நமது உடை அதை நன்றாக தாங்கும் என தெரிவித்துள்ளார்.

“ AK-47 hard steel core ammunition-களை தாங்க வல்ல தலைக்கவசத்தையும் நாங்கள் தயாரிக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.இவைகள் மூலம் நமது வீரர்களை தலை முதல் கால் வரை பாதுகாப்போம் ,” என Oberoi கூறியுள்ளார்.

தலைக்கவசம் ஏற்கனவே நமது Central Reserve Police Force உபயோகிக்கின்றன என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.