இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2024ல் 35,000 கோடிகள் அளவுக்கு வளரும்- இராணுவ தளபதி

இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2024ல் 35,000 கோடிகள் அளவுக்கு வளரும்- இராணுவ தளபதி

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 35000 கோடிகள் அளவிற்கு வளரும் என தளபதி ராவத் கூறியுள்ளார்.

நம்முடைய இராணுவத்திற்கு மட்டுமல்லாமல் ஏற்றுமதிக்காகவும் தற்போது ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுவருகிறது.தற்போது 11000 கோடிகள் அளவுக்கு ஏற்றுமதி நடப்பதாகவும் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் ஏற்றுமதி 35000 கோடிகள் என்ற அளவுக்கு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 Indigenous Defence Equipment Exporters Association நடத்திய நிகழ்வில் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்களுடன் கலந்து கொண்ட தளபதி இந்த தகவலை தெரிவித்தார்.

உலகின் முன்னனி இராணுவப் படைகளில் இந்திய இராணுவமும் ஒன்று.எண்ணிக்கையில் மட்டுமல்ல நாம் சண்டையில் நிறைய அனுபவங்கள் பெற்றுள்ளோம் என கூறினார்.

கடந்த சில வருடங்களாகவே உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த  defence expo லக்னோவில் பிப் 2020ல் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.