காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவும் 20 இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவும் 20 இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

காஷ்மீரீல் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ள 20 இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பாக்-இந்தியா எல்லையில் இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உளவுத் தகவல் படி,60 நன்கு ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் 20 இடங்களில் ஊடுருவ தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.பீர் பாஞ்சல் பகுதியில் தெற்கு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளனர்.

20 ஊடுருவும் இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பை இராணுவப் படைகள் பலப்படுத்தியுள்ளன.

இரு முதல் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பயங்கரவாத ஊடுருவலை முறியடிக்க அனைத்து வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து காவல் நிலையங்களும் , காவல் நிலைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய நடமாட்டங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் இராணுவம் மற்றும்  BSF அதிகாரிகளை சந்தித்தார்.

அதிகம்மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள்,ஆறு செல்லும் வழி,அதிகஉயரம் மிகுந்த மலைப் பிரதேசங்களில் தான் இதுபோன்ற ஊடுருவல்கள் நிகழ்கின்றன.

பாக் உடனான 180கிமீ எல்லையை காவல் காக்கும் எல்லைப் பாதுகாப்பு படை தனது கண்காணிப்பு நிலைகளின் பலத்தை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.