இந்திய-சீன எல்லையில் 18 புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி

இந்திய-சீன எல்லையில் 18 புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி

அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 1600 கிமீ தொலைவுக்கு புதிய 18 சாலைகள் அமைக்க யூனியன் அமைச்சர் கிசான் ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள 39வது பட்டாலியனில் இந்தோ திபத் எல்லைப் படையின் 58வது தொடக்க தினத்தில் பேசிய அவர் நாங்கள் ஏற்கனவே 1607 கிமீ செல்லும் 18 சாலைகளுக்காக 1175 கோடிகள் ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார். power vehicles மற்றும் வாகனங்கள் உதவியுடன் ஐடிபிபி வீரர்கள் இனி வேகமாக ரோந்து மற்றும் துரிதமாக களத்திற்கு செல்ல முடியும்.

மேலும் பேசுகையில் எதிரியின்  “evil designs” -ஐ கவனத்தில் கொண்டு ITBP இனி பெரிய ரோலுக்கு தயாராகஇருக்க வேண்டும் என கூறினார்.ஐடிபிபி படைக்கு இரு வானூர்திகள் வாங்கும் ஒப்பந்தம் இறுதி நிலையில் உள்ளது என்றும் இதன் மூலம் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்கு விரைந்து செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

 மேலும் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்கள் தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்படும்.

மேலும் பழைய ஆயுதங்களை மாற்ற புது ஆயுதங்கள் வாங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.