இந்தியா-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர்களை எட்டும் – பென்டகன்

இந்தியா-அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகம் இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர்களை எட்டும் என பென்டகன் தெரிவித்து உள்ளது.

டி.டி.டி.ஐ எனப்படும் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக குழுவானது இராணுவ தளவாடங்களின் மேம்பாடு மற்றும் உற்பத்திக்கான வாய்ப்புகளை அடையாளம் காணவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களில் ஒத்துழைக்கவும் மற்றும் இராணுவ உறவை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான கொள்கை மாற்றங்களை கூட்டாக ஆராய்ந்து வருகிறது.

புதுடெல்லியில் அடுத்தவாரம் ஒன்பதாவது இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக முயற்சி குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று பென்டகன் இன்று தெரிவித்துள்ளது.

பென்டகன் இணை பாதுகாப்புத் தலைவர் அடுத்த வாரம் புதுடெல்லி வருகிறார். இந்திய பாதுகாப்பு இணை செயலாளர் அபர்வ சந்திராவவை சந்தித்து பேசுகிறார்.

கையகப்படுத்தல் மற்றும் நிலைத்தன்மைக்கான பாதுகாப்பு துணை செயலாளர் எலன் எம் லார்ட் கூறியதாவது:-

அமெரிக்க பாதுகாப்புத் துறை எங்கள் இந்திய முக்கிய பாதுகாப்பு கூட்டாளியுடன் தொடர்ந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவுடனான தனது நட்பை வலுப்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு வர்த்தகம், அடிப்படையில் 2008 இல் பூஜ்ஜியமாக இருந்தது, இந்த ஆண்டின் பிற்பகுதியில் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்.

இந்தியாவுக்கு அதிக விநியோக அனுமதியை வழங்குவதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவிலான இரட்டை பயன்பாடை பெறும். இது உயர் தொழில்நுட்ப பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது என கூறினார்.

ஆகஸ்டில் நடந்த பாதுகாப்பு கொள்கைக் குழுவின் கூட்டத்தில், பாதுகாப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், கொள்முதல், தொழில், ஆர் அன்ட் டி மற்றும் மில்-டு-மில் ஈடுபாடு ஆகியவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து ஒத்துழைப்பை மேம்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.