Day: October 11, 2019

இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 500 பயங்கரவாதிகள்..!

October 11, 2019

இந்தியாவுக்குள் ஊடுருவும் சந்தர்ப்பத்துக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்து கொண்டிருப்பதாக இந்திய ராணுவத்தின் வடபிராந்திய படைப்பிரிவு தளபதி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பதேர்வா (BHADERWAH/JAMMU) எனுமிடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ எத்தனை பயங்கரவாதிகள் முயன்றாலும், அவர்களை தடுத்து நிறுத்தும் திறனும், அழிக்கும் திறனும் இந்திய ராணுவத்திடம் உண்டு என்றும் தெரிவித்தார். இதேபோல் ஜம்மு-காஷ்மீரில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் என்றும், பாகிஸ்தான் ஆதரவுடன் அப்பகுதியில் […]

Read More

பாக் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம்

October 11, 2019

பாக் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம் எல்லையில் இருந்து சோகச் செய்தி வருகிறது.எல்லைக் கோட்டு பகுதியில் பாக் தாக்குதலில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். கூர்கா வீரர் நாய்க் சுபாஸ் தாபா அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார். 25 வயதே ஆன அவர் 3/5 Gorkha Rifles-ஐ சேர்ந்தவர் ஆவார். ராஜோரியின் நௌசேரா செக்டாரில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலாக காயம் பட்ட அவரை உதம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வீரமரணம் அடைந்தார். […]

Read More

காஷ்மீர் விவகாரம்: மலேசியாவிலிருந்து பாமாயில், பிற பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள இந்தியா முடிவு

October 11, 2019

இந்தியாவை கோபப்படுத்திய மலேசிய பிரதமரின் காஷ்மீர் கருத்துக்களால் மலேசியாவில் இருந்து பாமாயில்-பிற பொருட்கள் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக்கொள்ள முடிவு செய்து உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. நியூயார்க்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஜம்மு-காஷ்மீர் “படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது” என்றும், இந்தியாவின் நடவடிக்கை “தவறானது” என்றும் கூறினார். இந்தியாவின் வெளிவிவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் விவகாரம் முற்றிலும் உள்நாட்டு […]

Read More

இந்தியாவுக்கு போர்க் கப்பல்களை கட்ட துருக்கி நிறுவன ஒப்பந்தம் ரத்து ?

October 11, 2019

இந்தியாவுக்கு 2.3 பில்லியன் டாலர் மதிப்பிலான கப்பல்களை கட்ட ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள துருக்கி நிறுவனம் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து பாதுகாப்புக் காரணங்களை கருதி அந்த ஒப்பந்தத்தை தொடருவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தியாவுக்கு 45 ஆயிரம் டன்கள் எடையுள்ள 5 போர்க் கப்பல்களை விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஷிப் யார்டு நிறுவனத்தில் கட்டுவது தொர்டர்பான டெண்டர் கடந்த ஜூன் மாதம் விடப்பட்டது. இதில் குறைந்த தொகையைக் குறிப்பிட்டதன் மூலம் துருக்கியின் டி.ஏ.ஐ.எஸ். கப்பல் கட்டும் நிறுவனம் தேர்வு […]

Read More

11 குர்திஷ் கிராமங்களை கைப்பற்றிய துருக்கி-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

October 11, 2019

11 குர்திஷ் கிராமங்களை கைப்பற்றிய துருக்கி-200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு குர்திஷ் போராளிகளிடம் இருந்து 11 கிராமங்கள் மற்றும் நகரங்களை துருக்கிய படைகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த சண்டைகளில் இருநூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கிய படைகள் குர்திஷ்தான் பகுதிக்குள் நுழைந்து கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. முன்னதாக துருக்கி படையெடுத்தால் பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.

Read More

ஸ்பைஸ் 2000 குண்டுகளை சுகாய் விமானங்களில் இணைக்க திட்டம்

October 11, 2019

ஸ்பைஸ் 2000 குண்டுகளை சுகாய் விமானங்களில் இணைக்க திட்டம் இந்திய விமானப் படையின் இரஷ்ய தயாரிப்பு Su30 MKI விமானங்களில்  Israeli தயாரிப்பு Spice 2000 guidance kit-enabled bombs குண்டுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாக்கின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிக்க  Spice 2000 bombs இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது.இந்த குண்டுகளை சுமந்து பறந்த மிராஜ் விமானங்கள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக விமானப்படை கூறியிருந்தது. இரஷ்ய தயாரிப்பு அல்லாத ஒரு குண்டு சுகாய் […]

Read More

வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்ச ராணுவ தாக்குதல் இந்தியா கவலை

October 11, 2019

வடகிழக்கு சிரியாவில் துருக்கி ஒருதலைப்பட்சமாக ராணுவ தாக்குதல் நடத்தி உள்ளதாக இந்தியா கவலை தெரிவித்து உள்ளது. துருக்கிய ஜெட் மற்றும் பீரங்கிகள் சிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் குர்திஷ் மக்கள் மீது தாக்கியது தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளதாவது:- வடகிழக்கு சிரியாவில் துருக்கியின் ஒருதலைப்பட்ச ராணுவத் […]

Read More