லடாக்கில் நிறுத்துவதற்காக, ரூ.10,000 கோடி செலவில் ஆகாஷ் ஏவுகணைகள்

 
பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லையை ஒட்டி அமைந்துள்ள லடாக்கில் நிறுத்துவதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்ய உள்ளது.
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகள், இந்திய ராணுவத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில், மலைப்பாங்கான பகுதிகளில் வான்வழி ஊடுருவலை தடுக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.
லடாக்கில் 15 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள பகுதிகளில் இந்த ஏவுகணைகளை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கும் முன்மொழிவை ராணுவம் அளித்துள்ளது. இந்த முன்மொழிவின் மீது பாதுகாப்புத்துறையின் கொள்முதல் குழு முடிவு எடுக்க உள்ளது.
முன்னர் இதற்கான ஏவுகணைகளை வாங்குவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்டர் அளிக்கப்பட இருந்த நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு சாதகமாக மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Polimer

Leave a Reply

Your email address will not be published.