Day: October 10, 2019

சிரியா எல்லையில் துருக்கி தாக்குதல்

October 10, 2019

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றம் நிலவுகிறது.  துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் வாழும் நிலப்பரப்பை குர்திஸ்தான் என்று அவர்கள் அழைத்துக் கொள்கின்றனர். ஒய்.பி.ஜி. எனப்படும் குர்தீஷ் மக்கள் பாதுகாப்புப் பிரிவு என்ற அமைப்பு தான் 3 […]

Read More

சீன அதிபர் வருகையை ஒட்டி சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

October 10, 2019

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் பேச்சைக் கேட்டு இதில் தலையிட வேண்டாம் என்றும் சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங் சென்றதும், அங்கு சீன அதிபர் ஜி-ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்திய போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதும் தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை […]

Read More

பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி வரும் குட்டிவிமானங்களை கண்டதும் சுட உத்தரவு

October 10, 2019

பஞ்சாபில் ராணுவ தளங்கள் மீது ஆளில்லாத குட்டி விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஃபெரோஸ்புர் பகுதியில் நேற்று பாகிஸ்தானின் ஆளில்லாத குட்டிவிமானம் ஒன்று எல்லை தாண்டி வந்து பறந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை பாகிஸ்தான் அனுப்பி வைப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அப்பகுதியில் பறக்கும் ஆளில்லா விமானங்களை கண்டதும் சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் பாதி எரிந்த நிலையில் விழுந்துக் கிடந்த ஒரு […]

Read More