குவாலியரில் MiG-21 பயிற்சி விமானம் விபத்து
குவாலியரில் மிக்-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி வருகிறது.நல்லவேளையாக விமானிகள் பத்திரமாக வெளியேறிவிட்டனர்.
குவாலியர் தளத்தில் இருந்து வழக்கமான பணியின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.காலை 10 மணி அளவில் தளத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.
க்ரூப் கேப்டன் மற்றும் ஸ்குவாட்ரான் லீடர் தரத்திலான விமானிகளிகள் பத்திரமாக வெளியேறினர்.
2017 முதல் விமானம் மற்றும் வானூர்தி என 27 சொத்துக்களை விமானப்படை இழந்துள்ளது.சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.