Meteor மற்றும் SCALP ஏவுகணைகளை அடுத்த வருடம் பெற உள்ள விமானப் படை
ரபேல் விமானங்களுக்கான ஏவுகணைகளான SCALP மற்றும் Meteor ஏவுகணைகளை அடுத்த வருடம் இந்திய விமானப் படை பெறும்.இதன் மூலம் நமது தென்னாசிய பகுதியில் சக்தி மிக்க ஆயுதங்களை பெற்ற நாடாக இந்தியா இருக்கும்.மேலும் இவை நமது எதிரிகளை விட நமக்கு பலத்தை தரும்.
SCALP ஒரு stand off ஏவுகணை.300கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்க கூடிய இந்த ஏவுகணையை நமது எல்லைக்குள் இருந்தவாறே எதிரி இலக்குகள் மீது செலுத்தலாம்.
அதிக மதிப்புள்ள எதிரிகளின் இலக்கு அதாவது பாலங்கள்,ரயில் பாதைகள்,சக்தி நிலையங்கள், வான்தளம், புதைக்கப்பட்ட பங்கர்கள் , கட்டளை மற்றும் கட்டுப்படுத்தி நிலையங்கள் போன்றவற்றை தாக்க இதை உபயோகிக்கலாம்.
தலையை ஒட்டியவாறு செல்லும் திறமை பெற்றிருப்பதால் இது எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளின் கண்ணில் மண்ணை தூவி இலக்கை அழிக்கும் என MBDA நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நாம் எல்லையை தாண்டாமலே 300 கிமீ தொலைவில் உள்ள எதிரி இலக்கை அழிக்கலாம்.
இது தவிர Meteor air to air missile வருகிறது.150கிமீ தொலைவு வரை எதிரி விமானங்களை வீழ்த்த வல்ல ஏவுகணையான இது பாகிஸ்தான் எப்-16 ரக விமானங்களை வீழ்த்த வல்லது.பாகிஸ்தானின் AMRAAM missiles-ஐ விட நெடுந்தூரம் பறக்கும் என்பதால் வான் சண்டை ஏற்படுமாயின் பாக் விமானம் வீழ்த்தப்படுவது உறுதி.