DRDO ஆளில்லா விமானம் கர்நாடகாவில் விபத்து

DRDO ஆளில்லா விமானம் கர்நாடகாவில் விபத்து

டிஆர்டிஓவின் ஆளில்லா விமானம் ஒன்று சித்ரதுர்கா மாவட்டத்தின் ஜொடிசிகெனாஹல்லி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் அதிகாலை 6 மணிக்கு நடந்ததாக தகவல்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தற்போது டிஆர்டிஓ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்திற்கு அருகே தான் Challakere Aeronautical Test Range (ATR) உள்ளது.இங்கு ஆளில்லா விமானம் மற்றும் ஆள் இயக்கும் விமானம் சோதனை செய்வது வழக்கம்.

முதற்கட்ட தகவல்படி விபத்துக்குள்ளான விமானம் ரஸ்டம் 2 என தகவல் வெளியாகியுள்ளது.

ரஸ்டம் 2 ஆளில்லா விமானம் டிஆர்டிஓ மேம்படுத்தி வரும் ஆளில்லா விமானம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.