லெப் கலோ அர்டெஷிர் பி டாராபோர்

7PVC

லெப் கலோ அர்டெஷிர் பி டாராபோர்

சேவை எண் : IC-5565

பிறப்பு : ஆக 18,1923

இடம் : மும்பை

சேவை : இராணுவம்

தரம் : லெப் கலோனல்

பிரிவு: 17 பூனா ஹார்ஸ்

நடவடிக்கை : ரிடில் நடவடிக்கை

விருது: பரம்வீர் சக்ரா

வீரமரணம் : செப் 16, 1965

லெப் கலோ அர்டேஷிர் தாராபோர்
மும்பையில் 18 ஆகஸ்டு 1923ல் பிறந்தார்.

பள்ளிப் படிப்பில் மிகச் சிறந்து விளங்க முடியாவிட்டாலும் அவர் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் அத்லெடிக்,குத்துச் சண்டை, நீச்சல்,டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்.பள்ளிப் படிப்பிற்கு பின் ஹைதராபாத் ஸ்டேட் இராணுலத்தில் இணைந்து கோல்கொன்டா அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் இணைந்தார்.ஜன 1, 1942ல் 7வது
ஹைதரபாத் இன்பான்ட்ரியில் இணைந்தார்.ஆனால் அவர் கவச வாகன படையில் இணைய விரும்பினார்.

 ஒரு முறை தனது சக வீரரான செபாய் ஒருவர் கிரேனேடு பயிற்சியின் போது தவறுதலாக கிரேனேடை தவற விட அது அவர் அருகிலேயே விழுந்தது.இதை கண்ட இளம் லெப் தாராப்போர் அவர்கள் பாய்ந்து சென்று கிரேனடை எடுத்து வெளியில் வீச அது அவர் கையிலேயே வெடித்தது.இதில் அவர் காயமடைந்தார்.இந்த மொத்த நிகழ்வையும் ஹைதராபாத் ஸ்டேட் படைத் தளபதி மேஜர் ஜென் எட்ரூஸ் பார்த்துக்கொண்டிருந்தார்.இதனால் அவருக்கு தளபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து தன்னை  கவசவாகன படைக்கு மாற்றுமாறு வேண்ட ,பின் அவர் ஆர்மர்டு ரெஜிமென்டில் முதல் ஹைதரபாத் இம்பீரியல் செர்விஸ் லான்சர் பிரிவில் இணைந்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது மத்திய கிழக்கில் இவரது படை அனுப்பப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு ஹைதரபாத் இந்தியாவுன் இணைக்கப்பட்டு, 1 ஏப்ரல் 1951ல் பூனா ஹார்ஸ் பிரிவில் இணைந்தார்.அதன் பிறகு பதவி உயர்வு பெற்று தனது படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரியாக உயர்ந்தார்.1965 போரில் தனது படைப்பிரிவை வழிநடத்தினார்.

1965ல் பாகிஸ்தான் இந்தியாவின் மேல் “ஜிப்ரால்டர் நடவடிக்கை”யை தொடங்கியது.இதற்கு பதிலடியாக இந்திய இராணுவம் சியால்கோட் செக்டாரின் சாவிண்டா மற்றும் பில்லோரா பகுதிகளை கைப்பற்ற விளைந்தது.

சாவிண்டாவின் அந்த நேரத்தில் இரண்டு ரெஜிமென்ட் ஆர்மர் மற்றும் இன்பான்ட்ரி ரெஜிமென்டுகளை பாகிஸ்தான் நிறுத்தியிருந்தது.செப் 11 அன்று அதிர்ச்சியளிக்கும் தாக்குதலாக லெப் கலோ தாராப்போர் அவர்கள் தலைமையில் 17வது பூனா ஹார்ஸ் டாங்க் படை பின்பக்கமாக பாக் படைகளை தாக்கியது.பில்லோரா மற்றும் சாவிண்டா பகுதிகளுக்கு நடுவே படைகள் முன்னேறிய போது வசிராலி என்ற பகுதியில் எதிரியின் கவச வாகன படை இடைமறித்தது.

தனது நிலையை பற்றி தாக்குதலை தொங்கினால் லெப் கலோ தாராப்போர்.அவரது படையின் ஒரு ஸ்குவாட்ரான் பிரிவு வீரர்களுடன் இன்பான்ட்ரி வீரர்களும்போரிட்டனர்.இந்த சண்டையில் 13 டேங்குகள் இழக்க சாவிண்டாவை விட்டு பாக் ஓடியது.பில்லோரா கைப்பற்றப்பட்டது.மிக திறமையோடு லெப் கலோ தாராப்போர் போரிட்டார் ஆனால் அவர் இந்த சண்டையில் காயமடைந்தார்.ஆனால் அவர் அடுத்து வசிராலி,ஜசோரான் மற்றும் புடூர் டோக்ரான்டி பகுதிகளை கைப்பற்ற தயாரானார்.

13/14 செப் 1965,ல் லெப் கலோ தராப்பூரின் 17 பூனா ஹார்ஸ் மற்றும் 9 கார்வால் பட்டாலியன் வீரர்கள் இணைந்து தாக்குதலை தொடங்கினர்.வாசிராலி 14 செப் அன்று கைப்பற்றப்பட்டது.புதுர் மற்றும் டோக்ரன்டி பகுதிகளில் பதுங்கியிருந்து எதிரிகள் மீதான தாக்குதலை வழிநடத்தினர் .

9 டோக்ரா பட்டாலியனுடன் இணைந்து ஜஸ்ஸோரான் இடத்தை கைப்பற்றினார்.இதில் அவர் ஆறு எதிரி டாங்குகளை வீழ்த்தினார்.8 கார்வாலுடன் இணைந்து புடுர் மற்றும் டோக்ரன்டி பகுதிகளை செப் 16ல் கைப்பற்றினார்.இந்த தாக்குதல்களில் அவரது டேங்க் பலமுறை தாக்குதலுக்குள்ளானது.ஆனால் அவர் விடாமல் சாவின்டாவை பின்புறம் இருந்து தாக்க இன்பான்ட்ரி வீரர்களுக்கு உதவிபுரிந்தார்.இதன் காரணமாக உற்சாகமுற்ற படைப்பிரிவு எதிரி கவசவாகன படையை அடித்து துவம்சம் செய்தது.இதில் நாம் ஒன்பது டாங்க் இழக்க எதிரியின் அறுபது டேங்குகள் நொறுக்கப்பட்டன.ஆனால் துரதிர்ஷடவசமாக ஒரு டேங்க் எதிர்ப்பு ஷெல் அவரது டேங்கை தாக்கி அதை தீப்பற்றச் செய்தது.இதில் லெப் கலோ அவர்கள் வீரமரணம் அடைந்தார்.படைகளை முன்னின்று தலைமை தாங்கியது,அதிகபட்ச வீரம்,தலைமைப்பண்பு ,தைரியம் மற்றும் வீரத்தியாகம் காரணமாக அவருக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

வீரவணக்கம்

Leave a Reply

Your email address will not be published.