காங்கோ நாட்டில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி உடல் மீட்பு

காங்கோ நாட்டில் பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியின் உடல் அங்குள்ள ஏரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சண்டை, அரசியல் நெருக்கடியில் தவிக்கும் காங்கோவில் அமைதியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை அங்கு பணியாற்றி வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அந்த வகையில், காங்கோவில் ஐநா அமைதிப்படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கி, கிபு ஏரியில் படகு ஓட்டிச் சென்றபோது  கடந்த சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை, அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அவரது உடல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டதாக ஐநா செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 


Leave a Reply

Your email address will not be published.