அஸ்திரா ஐந்து முறை தொடர் சோதனை : அனைத்தும் வெற்றி

அஸ்திரா ஐந்து முறை தொடர் சோதனை : அனைத்தும் வெற்றி

இந்தியாவின்
Defence Research and Development Organisation (DRDO) மேம்படுத்திய  Beyond Visual Range Air-to-Air Missile (BVRAAM) ஏவுகணை தான் ‘Astra.தற்போது ஒடிசா கடற்பகுதியில் உள்ள சந்திப்பூரில் இருந்து Su-30 MKI விமானத்தில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16th முதல் 19th செப்டம்பர் வரை ஐந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Jet Banshee target aircraft இலக்காக பாவனை செய்யப்பட அதன் மீது ஏவி சோதனை செய்யப்பட்டது.

வெவ்வேறான மாற்றியமைக்கப்பட்ட ஐந்து அஸ்திரா ஏவுகணைகள் இலக்கு மீது ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.

சோதனையின் போது மூன்று ஏவுகணைகள் combat configuration-ல்   warhead உடன்   வளைந்து நெளந்து சென்ற ( manoeuvring targets) இலக்கு மீது ஏவப்பட்டது.இதில் ஏவுகணை இலக்கை மிகத்துல்லியமாக தாக்கியழித்தது.ஏவுகணையின் அனைத்து துணை அமைப்புகளும் சரியாக செயல்பட சோதனை வெற்றாயானது.

Astra BVRAAM 100கிமீ வரை செல்லக்கூடியது.அதி நவீன guidance மற்றும் navigation அமைப்புகள் இந்த ஏவுகணையில் உள்ளது.

பயன்படுத்துபவருக்கான (விமானப்படை ) சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. Hindustan Aeronautics Limited (HAL) நிறுவனம் இந்த ஏவுகணையை சுமந்து செல்லும் வண்ணம் விமானங்களை மாற்றியமைத்து வருகிறது.

அஸ்திரா ஏவுகணை தயாரிப்புக்கு கிட்டத்தட்ட 50 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றி உள்ளன.

அஸ்திரா ஏவுகணை உண்மையாகவே ஒரு நல்ல ஆயுதம்.பலகாலநிலைகளில் செயல்படக்கூடிய இந்த ஏவுகணை இந்தியாவின் சொந்த தயாரிப்பு.இனி வரும் காலங்களில் மேலும் பல வான்-வான் ஏவுகணைகள் மற்றும் வான்-தரை ஏவுகணைகள் மேம்படுத்த இந்த அனுபவம் உதவும்.

வாழ்த்துக்கள் டிஆர்டிஓ

Leave a Reply

Your email address will not be published.