பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்தியா..!

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் (BAT Border Action Team) மேற்கொண்ட ஊடுருவல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபூர் செக்டார் பகுதியில் (Hajipir Sector) இருந்து இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் எல்லை அதிரடிப் படையினர் கடந்த 10, 11, 12ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் ஊடுருவ முயற்சித்தனர். இதை எல்லையில் இருந்த இந்திய வீரர்கள் கண்டுபிடித்து முறியடித்தனர்.
அப்போது இந்திய வீரர் ஒருவரால் தெர்மல் இமேஜர் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், பாகிஸ்தான் படையினர் ரகசியமாக மறைந்து வருவதும், அவர்களின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் கண்டுபிடித்து முறியடிப்பதும் இடம்பெற்றுள்ளது.
இந்திய வீரர்கள் நடத்தியத் தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்திய எல்லை பகுதியில் நடைபெறும் ஊடுருவல் முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. அதை பொய்யாக்கும் வகையில் இந்த காட்சிகள் அமைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.