பஞ்சாப் ரெஜிமென்ட்
1947ல் பிரிட்டிஷ் இராணுவத்தின் 2வது பஞ்சாப் ரெஜிமென்டில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.இந்திய இராணுவத்தின் பழமையான ரெஜிமென்டுகளில் இதுவும் ஒன்று. இந்திய இராணுவத்தின் பல்வேறு போர்களிலும்,உலகப் போர்களிலும் கலந்து கொண்டு தனது போர்த்திறமையை உலகுக்கு உணர்த்திய ரெஜிமென்ட் ஆகும். இந்திய இராணுவத்தில் மிகவும் பாராட்டப்பட்ட ரெஜிமென்டுகளில் பஞ்சாப் ரெஜிமென்டும் ஒன்று.
1761 ல் தனது இராணுவச் சரித்திரத்தை தொடங்கிய பஞ்சாப் ரெஜிமென்ட் இந்திய இராணுவத்தில் தற்போது 19 லைன் பட்டாலியன்களை கொண்டுள்ளது.ஜார்க்கண்டில் உள்ள ராம்கர் கன்டோன்மென்ட் தான் இதன் தலைமையகம்.Sthal Wa Jal (By Land and Sea)என்பதை கொள்கையாகவும் , கடவுளுக்கு உண்மையாக இருப்பவன் மகிழ்ச்சியாக இருப்பான் (சீக் வீரர்கள்) மற்றும் ஜவாலா மாதாவிற்கே வெற்றி (டோக்ரா வீரர்கள்) என்பதை போர்க்குரலாகவும் கொண்டுள்ளனர்.
2 பத்ம பூசன், 1 பத்ம ஸ்ரீ, 18 மகா வீர் சக்ரா,12 கீர்த்தி சக்ரா,
8 பரம் விசிஷ்ட் சேவா விருதுகள்
2 உட்டம் யுத்த சேவா விருது,
10 அதிவிசிஷ்ட் சேவா விருது,
59 வீர் சக்ரா,56 சௌரிய சக்ரா,
05 யுத்த சேவா விருது, 33 விசிஸ்ட் சேவா விருது ,277 சேவா விருது,
156 mention in despatch ஆகிய விருதுகளை பெற்று வீரத்தின் விளைநிலமாகவே உள்ளது.
8 பரம் விசிஷ்ட் சேவா விருதுகள்
2 உட்டம் யுத்த சேவா விருது,
10 அதிவிசிஷ்ட் சேவா விருது,
59 வீர் சக்ரா,56 சௌரிய சக்ரா,
05 யுத்த சேவா விருது, 33 விசிஸ்ட் சேவா விருது ,277 சேவா விருது,
156 mention in despatch ஆகிய விருதுகளை பெற்று வீரத்தின் விளைநிலமாகவே உள்ளது.
பிரிவினையின் போது பஞ்சாப் ரெஜிமென்டும் பிரிக்கப்பட்டது.இன்றும் பாக் இர்ணுவத்தில் பஞ்சாப் ரெஜிமன்ட் உள்ளது.பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் முதல் பஞ்சாப் ரெஜிமென்ட் ,2 பஞ்சாப் ரெஜிமென்ட் , 8வது பஞ்சாப் ரெஜிமென்ட் , 14வது பஞ்சாப் ரெஜிமென்ட் , 15வது பஞ்சாப் ரெஜிமென்ட் மற்றும் 16வது பஞ்சாப் ரெஜிமென்ட் இருந்தன. பிரிவினையின் போது 2வது பஞ்சாப் ரெஜிமென்ட் தவிர மற்ற ரெஜிமென்ட்கள் பாக்கிற்கு வழங்கப்பட்டது. பாக் பகுதியை சேர்ந்தவரா அல்லது இந்தியப் பகுதியை சேர்ந்தவரா என்பதன் அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டனர்.
15வது பஞ்சாப்
15வது பஞ்சாப் (Formerly First Patiala) இந்திய இராணுவத்தின் ஒரு மிகச் சிறந்த பட்டாலியன் ஆகும். இந்திய இராணுவத்தில் ,ஏப்ரல் 13, 2005 அன்று 300 ஆண்டுகளை நிவர்த்தி செய்துள்ளது.தற்போது மேற்கு செக்டாரில் தனது பணியை தொடர்கிறது. இந்தியா இராணுவத்தில் இரண்டாவது அதிக விருதுகளை பெற்ற பட்டாலியனாக திகழ்கிறது. முதல் உலகப் போரில் மத்திய கிழக்கிலும்,இரண்டாம் உலகப் போரில் பர்மா போரில் ஜப்பானுக்கு எதிராகவும் போரிட்டது.ஜப்பான் படைகளின் தொலை தொடர்பகளை துண்டித்து அவர்கள் இந்தியாவிற்குள் முன்னேறாமல் தடுத்தது.அதன் பிறகு டிக்சன் துறைமுகம் சென்று மலாயா மற்றும் ஜாவா போரில் பங்கேற்றது. மேலும் 15 பஞ்சாப் இந்தியாஇராணுவத்தின் வீரமிக்க படையாகவும் கருதப்படுகிறது.ஐநா அமைதிப்படையின் கீழ் லெபனான் மற்றும் சூடானில் தனது பங்களிப்பை செய்துள்ளது.அது மட்டுமல்லாமல் ஐநா அமைதிப் படையின் லெபனான் ஆபரேசனுக்கு கேப்டன் அவ்தார் சிங் மூத்த அதிகாரியாவும் மேஜர் சுரிந்தர் சிங் லெபனான் ஆபரேசனுக்கு தளபதியாகவும் இருந்துள்ளனர்.அவர்கள் இருவரும் ஐநா அமைதிப்படை வரலாற்றில் இன்றளவும் மதிக்கப்படும் சிறந்த அதிகாரிகளாக செயல்பட்டனர்.
2வது பஞ்சாப்
2வது பஞ்சாப் ( தற்போது பிரைகேட் ஆப் கார்டு-ல் முதல் பட்டாலியன்) 1762ல் தொடங்கப்பட்டது. முன்னாள் பீல்டு மார்சல் கரியப்பா அவர்கள் மிகக் கவனமாக ஆல் தேர்வு செய்து இந்த பட்டாலியனை ஏப்ரல் 1951ல் முதல் கார்டு ( First Guards) பட்டாலியான உருவாக்கினார்.இதன் முதல் கமாண்டிங் அதிகாரா லெட்.கலோ. சிவிந்தர் சிங் அவர்கள்.
தற்போது 3,14,15 மற்றும் 16வது பட்டாலியன்கள் முறையே கானா,அங்கோலா,லெபனான் மற்றும் காங்கோவில் அமைதிப் படையில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது பஞ்சாப் ரெஜிமென்டின் தலைமையகம் ஜார்க்கண்டின் ராம்கரில் உள்ளது.1,22,37,53வது பட்டாலியன்கள் இராஷ்டீரிய ரைபிள்ஸ் படை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.முதல் பட்டாலியன் பாரா சிறப்பு படையாக மாற்றப்பட்டுள்ளது.7வது பட்டாலியன் 8வது மெகானைஸ்டு இன்பாட்ரியாக செயல்பாட்டில் உள்ளது.
தற்போது பஞ்சாப் ரெஜிமென்டில் டோக்ரா மற்றும் சீக்கியர்கள் மட்டுமே இணைக்கப்படுவர்.இவர்கள் ஜம்முவின் வடக்கு பகுதி, இமாச்சல்,பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.ஆனால் 19 மற்றும் 27வது பட்டாலியனில் மற்ற இனத்தவரும் இணைத்துக் கொள்ளப்படுவர்.
லாங்கேவாலா போர்
1971 இந்தியா பாக்கிஸ்தான் போரில் 23வது பஞ்சாபின் 120 வீரர்கள் பாகிஸ்தானின ஒரு முழு பிரைகேடு வீரர்களை (4000 வீரர்கள் ) எதிர்த்து நின்றனர். மேற்கு பாலைவனத்தின் எல்லை நிலையான லாங்கேவாலா என்னுமிடத்தில் இந்த போர் நடைபெற்றது. 5 டிசம்பர் 1971ல் இரவின் கடைசி மூன்று மணி நேரங்கள் இந்த போர் இந்திய விமானப் படையின் உதவிகூட இல்லாமல் நடைபெற்றது. ஏனெனில் அந்தக் காலத்தில் விமானப் படையால் இரவில் செயல்பட முடியாத நிலை.இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.மேஜர் குல்தீப் சிங் அவர்களுக்கு மகா வீர் சக்ரா வழங்கப்பட்டது.